ஆப்கானிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைந்துள்ளது பர்வான். ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் தற்போது கடந்த ஓரிரு தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதையும் படிங்க: இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன உளவு கப்பலுக்கு அனுமதி... இலங்கை செயலால் இந்தியாவுக்கு ஆபத்தா?
இதன் காரணமாக, வடக்கு பர்வானில் நேற்று முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளத்தால் குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இதுதவிர 17 பேர் காயமடைந்துள்ளனர். பர்வான் பகுதியில் உள்ள மூன்று மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கத்திக்குத்தில் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்பார்வையை இழக்கலாம்: வென்டிலேட்டரில் தீவிர சிகிச்சை
ஆப்கானிஸ்தான் வானிலை ஆய்வு மையம் அந்த நாட்டில் கனமழை தொடர்ந்து சில நாட்களுக்கு பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 19 மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் 40 பேர் கனமழையால் பரிதாபமாக உயிரிழந்தனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும், மீட்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாயமானவர்களை மீட்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.