Salman Rushdie: கத்திக்குத்தில் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்பார்வையை இழக்கலாம்: வென்டிலேட்டரில் தீவிர சிகிச்சை

By Pothy RajFirst Published Aug 13, 2022, 6:40 AM IST
Highlights

நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தியதையடுத்து அவருக்கு ஒரு கண்பார்வை பறிபோகலாம் என சர்வதேச செய்தி நிறுவனமான ஏபி தெரிவித்துள்ளது.

நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தியதையடுத்து அவருக்கு ஒரு கண்பார்வை பறிபோகலாம் என சர்வதேச செய்தி நிறுவனமான ஏபி தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் சல்மான் ருஷ்டிக்கு கைப் பகுதியில் நரம்புகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு நீண்டநேரம் அறுவை சிகிச்சை நடந்ததால், சல்மான் ருஷ்டி தொடர்ந்து வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

கொலை செய்ய உத்தரவிட்ட ஈரான் அதிபர்.. சர்ச்சைகளின் நாயகன் - யார் இந்த சல்மான் ருஷ்டி ?

இந்தியாவில் பிறந்த எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கடந்த 1988ம் ஆண்டு எழுதி வெளியிட்ட தி சாத்தானிக் வெர்சஸ்(சாத்தானின் வசனங்கள்) அவருக்கு பெரிய அச்சறுத்தலை ஏற்படுத்தியது. 

ஏறக்குறைய பல ஆண்டுகள் அவர்  வெளியே சுதந்திரமாக நடமாட முடியாத வகையில் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களைக் கொண்டுவந்தது. சல்மான் ருஷ்டி எழுதிய சாத்தானின் வசனங்கள் முஸ்லிம்கள் மத்தியில் பெரிய அதிருப்தி, கோபம், எதிர்ப்பை ஏற்படுத்தியது. 

முஸ்லிம் மதத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி பல நாடுகள் சல்மான் ருஷ்டி புத்தகத்துக்கு தடை விதித்தன. ஈரானைச் சேர்ந்த மதகுரு ஆயத்துல்லா ரூஹோலா கொமேனி சல்மான் ருஷ்டியை கொலை செய்ய வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தார். இந்த பத்வா இன்னும் கூட திரும்பப் பெறப்படவில்லை. 
இதனால் சல்மான் ருஷ்டி அச்சத்துடனை வாழ வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள சாட்டகுவா நிறுவனத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பங்கேற்றார்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 2023லிருந்து பவுடர் விற்பனையை நிறுத்துகிறது

அப்போது மேடையில் சல்மான் ருஷ்டி பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அடையாளம் தெரியாத நபர் மேடைக்குச் சென்று தான்வைத்திருந்த கத்தியால், சல்மான் ருஷ்டியின் கழுத்தில் குத்தினார்.

இதைப் பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேடையில் இருந்தவர்கள் அந்த நபரைப்பிடித்து தடுத்தனர். அதற்கு சல்மான் ருஷ்டிக்கு கழுத்து, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மேடையில் சரிந்தார்.

இதையடுத்து அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களில் ஒரு மருத்துவர் சல்மான் ருஷ்டிக்கு முதலுதவி சிகிச்சையளித்து, உடனடியாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சல்மான் ருஷ்டியின் உடல் கத்திகுத்தில் மோசமாக பாதிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு நீண்ட நேரம் அறுவை சிகிச்சை நடந்தது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

 சல்மான் ருஷ்டிக்கு முதலுதவி சிகிச்சையளித்த மருத்துவர் மார்டின் ஹெஸ்கெல் கூறுகையில் “ சல்மான் ருஷ்டிக்கு ஏற்பட்ட காயம் தீவிரமானது, ஆனால் காப்பாற்றிவிடலாம்” எனத் தெரிவித்தார்

ஊழியர்களுக்காக கண்ணீர்விட்டு கதறிய நிறுவன சிஇஓ: என்ன காரணம்? LinkedIn -ல் வைரலாகும் செல்பி

இதற்கிடையே சல்மான் ருஷ்டி அனுமதிக்கப்பட்டுள்ள நியூயார்க் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில் “ சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்பார்வை பறிபோவதற்கு வாய்ப்பு உள்ளது. கழுத்து, கை நரம்புகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நீண்ட நேரம் அறுவை சிகிச்சை நடந்தநிலையில் தொடர்ந்து வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தனர்.

நியூயார்க் நகர போலீஸ் அதிகாரி மேஜர் ஜெனி ஸ்டெயின்ஜிவ்ஸ்கி கூறுகையில் “ சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவரை அடையாளம் கண்டுபிடித்துள்ளோம். அவர் பெயர் ஹதி மதார்(வயது24) நியூஜெர்ஸியில் உள்ள பேர்வியூ பகுதியைச்சேர்ந்தவர், அவரை கைது விசாரணைநடத்தி வருகிறோம்.

பார்வையாளர்கள் பலரிடம் விசாரித்ததில் மதார் கறுப்பு ஆடை அணிந்து, முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தார் என்று தெரிவித்தனர். மேடைக்கு ஏறிய மதார், திடீரென தனது கையில் வைத்திருந்த கத்தியால் குறைந்தபட்சம் 10 முறையாவது சல்மானை குத்தியிருக்கலாம் என்று பார்வையாளர்கள் தெரிவித்தனர்” எனத் தெரிவித்தார்

click me!