நியூயார்க்கில் விரிவுரை மேடையில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டார்.
1947 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார் சல்மான் ருஷ்டி. இவரது தந்தை கேம்பிரிட்ஜில் படித்த வழக்கறிஞர் ஆவார். அதுமட்டுமல்ல பிரபல வர்த்தகராகவும் இருந்துள்ளார். மும்பையில் தனியார் பள்ளியிலும், பின்னர் இங்கிலாந்தின் வார்விக் - ஷயரில் உள்ள உறைவிடப் பள்ளியிலும் படித்த இவர், கிங்ஸ் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற சல்மான் ருஷ்டி, க்ரிமஸ் என்ற நாவலை முதலில் எழுதினார். ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த நாவல் பிரபலமடையவில்லை. இவரது 2வது நாவலான மிட்நைட்ஸ் சில்ட்ரன் உலக அளவில் பிரபலமாகியது என்றே கூறலாம். எந்த அளவுக்கு என்றால், எழுத்தாளர்களின் கனவு விருதான புக்கர் பரிசை இவருக்கு வென்று கொடுத்தது இந்த நாவல் தான்.
: India born author Salman Rushdie stabbed on stage at an event in New York. Attacker arrested by the Police. Rushdie has faced death threats from Islamists since years after writing The Satanic Verses. The event where he was attacked was by . pic.twitter.com/56o13hFNHg
— Aditya Raj Kaul (@AdityaRajKaul)அதன் பிறகு 1983 ஆம் ஆண்டு ஷேம் என்ற நாவலை எழுதினார். அடுத்ததாக இவர் எழுதிய சாத்தானின் வேதங்கள் (தி சாட்டனிக் வெர்சஸ்) என்ற நாவல் 1988 ஆம் ஆண்டு வெளிவந்தது. இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, உலகின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஜப்பான் மொழியில் இந்த நாவலை மொழிபெயர்ப்பு செய்த ஒருவர் 1991ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு..ஒன்று சேரும் ஓபிஎஸ் - சசிகலா? பதறும் எடப்பாடி பழனிசாமி..அதிமுகவில் மீண்டும் பரபரப்பு !
சல்மான் ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று ஈரான் அதிபர் அயதுல்லா கொமேனி ‘உத்தரவிட்டார். சல்மான் ருஷ்டியின் தலைக்கு கோடிக்கணக்கில் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. அந்த நிலையில் இங்கிலாந்து அரசு இவருக்கு அடைக்கலம் அளிக்க முன்வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சல்மான் ருஷ்டி இன்று கலந்து கொண்டுள்ளார்.
Salman Rushdie seen here being evacuated in a Medevac Air Ambulance in New York. pic.twitter.com/VlD63289lW
— Aditya Raj Kaul (@AdityaRajKaul)அப்போது அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். சற்றும் எதிர்பாராத ருஷ்டி நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். பிறகு அங்கிருந்த பாதுகாவலர்களால் அவர் உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரபூர்வமாக எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் செய்திகளுக்கு..பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை கதி? நாங்க யாருக்கு சிலை வைப்போம் தெரியுமா ? அண்ணாமலை அதிரடி