இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்சே சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்கான கால அவகாசம் முடிந்ததை அடுத்து அவர் தாய்லாந்து சென்றடைந்தார்.
இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்சே சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்கான கால அவகாசம் முடிந்ததை அடுத்து அவர் தாய்லாந்து சென்றடைந்தார். இலங்கையில் நடைபெற்று வரும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையாக திண்டாடி வருகின்றனர். இதனால் வெகுண்டெழுந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதோடு பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
இதையும் படிங்க: காபூலில் தற்கொலைப்படை தாக்குதல்… ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பலி!!
இதனால் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை உட்பட அரசு அதிகாரிகள் பலரின் வீடுகளை சுற்றி வளைத்து தாக்கி தீ வைத்து எரித்தனர். இதையடுத்து கோட்டபய ராஜபக்சே மாலத்தீவு தப்பிச் சென்றார். அங்கும் எதிர்ப்பு கிளம்ப அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். தனது அதிபர் பதவியை சிங்கப்பூரில் இருந்தபடியே ராஜினாமா செய்தார். முதலில் 15 நாட்கள் மட்டுமே சிங்கப்பூரில் தங்குவதற்கு விசா வழங்கப்பட்டது. பின்னர் மீண்டும் 15 நாட்களுக்கு சிங்கப்பூர் விசா நீட்டிப்பு செய்தது.
இதையும் படிங்க: குரங்கம்மைக்கு இத்தாலி நாட்டில் தடுப்பூசி சோதனை துவக்கம்!!
இதற்கு மேல் சிங்கப்பூர் நாட்டில் தங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே அந்நாட்டில் தங்கி இருப்பதற்கான கால அவகாசம் முடிந்து விட்டதால் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு தாய்லாந்துக்கு சென்றிருக்கிறார். கோட்டபய ராஜபக்சே தாய்லாந்துக்கு வருவதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என அந்நாட்டு அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் அந்நாட்டிற்கு சென்றிருக்கிறார்.