தலிபான் அமைப்பின் மூத்த உறுப்பினரான ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி காபூலில் உள்ள அவரது மதரஸாவில் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.
தலிபான் அமைப்பின் மூத்த உறுப்பினரான ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி காபூலில் உள்ள அவரது மதரஸாவில் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். தலிபான் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி காபூலில் உள்ள மதரஸாவில் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். அக்டோபர் 2020 இல், அவர் பெஷாவரில் தற்கொலைப் படைத் தாக்குதலில் இருந்து தப்பினார்.
இதையும் படிங்க: குரங்கம்மைக்கு இத்தாலி நாட்டில் தடுப்பூசி சோதனை துவக்கம்!!
ஹதீஸ் இலக்கியத்தில் அறிஞராகக் கூறப்படும் ஹக்கானி, பாகிஸ்தானின் ஸ்வாபி மற்றும் அகோரா கட்டாக்கில் உள்ள தியோபந்தி மதரஸாக்களில் தனது மதக் கல்வியைப் பெற்றார். ஹக்கானி ஒரு காலத்தில் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள தலிபான் இராணுவ ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தால் ஹக்கானி கைது செய்யப்பட்டு பாக்ராம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் தீவிரவாதிக்கு சீனா ஆதரவு: இந்தியா, அமெரிக்கா முயற்சிக்கு முட்டுக்கட்டை
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவரான ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி காபூலில் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள ஒரு மத செமினரியில் நடந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக கால் இழந்த ஒருவர் பிளாஸ்டிக் செயற்கைக் காலில் மறைத்து வைத்திருந்த வெடிமருந்துகளை வெடிக்கச் செய்ததாகவும் இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் தலிபான்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.