LinkedIn: layoff: ஊழியர்களுக்காக கண்ணீர்விட்டு கதறிய நிறுவன சிஇஓ: என்ன காரணம்?  LinkedIn -ல் வைரலாகும் செல்பி

By Pothy RajFirst Published Aug 11, 2022, 5:15 PM IST
Highlights

தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டதை நினைத்து LinkedIn தளத்தில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கண்ணீர்விட்டு அழும் காட்சி வைரலாகியுள்ளது.

தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டதை நினைத்து  LinkedIn தளத்தில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கண்ணீர்விட்டு அழும் காட்சி வைரலாகியுள்ளது.

இதுவரை அவரின் பதவிக்கு 15 ஆயிரம் லைக்குகளும், 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமெண்ட்டுகளும் வந்துள்ளன. 

அமெரி்க்காவில் ஏற்பட்ட பணவீக்கம், பொருளாதார மந்தநிலையால் ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்ந்து வருகிறது. அமேசான், அலிபாபா, நெட்பிளிக்ஸ் என ஏராளமான நிறுவனங்களில் பணிநீக்கம் தொடர்ந்து வருகிறது. பணநீக்கம் எந்த அளவு கொடுமையானதோ அதைவிட அதற்கு பின் ஊழியர்களின் காலம் மோசமானதாக இருக்கும். 

அதிர்ச்சி!! வெறும் 3 மாதத்தில் 10,000 ஊழியர்களை தூக்கிய அலிபாபா.. இது தான் காரணமா..?

பொருளாதார காரணங்கள், கொரோனா, நிர்வாகச்சீர்திருத்தம் காரணமாக ஊழியர்கள் நீக்கப்படுவதுண்டு, இதை ஒரு காரணமாகக் கூறி உயர் அதிகாரிகள் கடந்துவிடுவார்கள். ஆனால், தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு சிஇஓ ஒருவர் கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

ஹைப்பர் சோசியல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் பிராடன் வாலக். இவர் லிங்க்டுஇன் பக்கத்தில் தான் கண்ணீர்விட்டு அழும் காட்சியை செல்பி எடுத்துபதிவிட்டுள்ளார். தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்துஅவர்களை கடினமான சூழலுக்குள் தள்ளிவிட்டேன் என்று லிங்க்டுஇன்னில் தெரிவித்துள்ளார்.

லிங்க்டுஇன்னில் பிராடன் வாலக் கூறுகையில் “ நான் இதுவரை பகிர்ந்து கொண்டதிலேயே மிகவும் வேதனைக்குரியது இதுதான். இந்த பதிவை வெளியிடமாலா அல்லது வேண்டாமா என்று நினைத்தேன். எங்கள் நிறுவன ஊழியர்கள் சிலரை நாங்கள் வேலையிலிருந்து நீக்கிவிட்டோம்.

நாடு நாடாக செல்லும் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே; அடுத்தது எங்கே செல்கிறார்?

லிங்க்டுஇன் தளத்தில் ஏராளமான பணிநீக்கம் செய்திகளை கடந்த வாரங்களில் பார்த்தேன். பெரும்பாலும் பொருளாதாரக் காரணம் அல்லதுவேறு ஏதாவது காரணமாக இருக்கும். எதுவாக இருந்தாலும் இது எங்கள் தவறுதான்.

நான் செய்த செயல்களில் மிகவும் சவாலானது. ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இந்த முடிவை நான் பிப்ரவரி மாதமே எடுத்துவிட்டேன். ஆனால், இதை செயல்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டேன். இப்போது நாங்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு என்று எங்கள் டீம்  கூறும்.

china: langya virus: henipavirus: சீனாவில் புதிய ‘ லாங்யா ஹெனிபா வைரஸ்’ பரவல்: 3 அறிகுறிகள் என்ன?

ஆனால், அந்த முடிவுக்கு நான்தான் தலைமை ஏற்றேன். அதற்கு காரணம், வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்களின் தோல்வியால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நான் செய்ததில் கடினமான காரியம் இதுதான். இது கடினமான முடிவு என்றாலும் என்னைப் பற்றி ஊழியர்களுக்கு தெரியும்.நான் என் ஊழியர்களை எவ்வாறு நேசித்தேன், என் அடிமனதில் இருந்து எவ்வளவு செய்திருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும் என நம்புகிறேன்”

இவ்வாறு வாலக்கே தெரிவித்துள்ளார்.

click me!