அதிர்ச்சி!! வெறும் 3 மாதத்தில் 10,000 ஊழியர்களை தூக்கிய அலிபாபா.. இது தான் காரணமா..?

By Thanalakshmi VFirst Published Aug 11, 2022, 12:18 PM IST
Highlights

சீனாவின் மிக பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
 

1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அலிபாபா நிறுவனத்தில், 2015 ஆண்டில் தலைமை நிர்வாக அதிகாரியாக டேனியல் ஜாங்க் என்பவர் நியமிக்கப்பட்ட பிறகு , பல்வேறு மறுசீரமைப்பு பெற்றது. பின்பு 2019 ஆம் ஆண்டு இவர் தலைவராக பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் தனது நிகர வருமானத்தில் 50 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது இந்நிறுவனம். இந்த இழப்பை சரி செய்யும் வகையில் செலவுகளை குறைக்கும் முயற்சியில் இந்நிறுவனம் ஈடுபடுகிறது. அதன் அடிப்படையில் தான் , தற்போது இந்த பணிநீக்கம் நடவடிக்கை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க:இந்தியா எதிர்ப்பையும் மீறி சீனாவின் உளவு கப்பல் இன்று இலங்கை வருகை! - 750 கிமீ நோட்டமிடும் என்பதால் உஷார்

நாட்டின் நிலவும் பொருளாதார மந்த நிலை மற்றும் விற்பனை குறைவு உள்ளிட்ட காரணங்களால் பிரதான செலவுகளைக் குறைக்கும் முயற்சி இதுவாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் ஜுன் மாதத்தில் முடிவடைந்த காலாண்டில், சுமார் 9 ஆயிரத்து 241 ஊழியர்களை பணியிலிருந்து விடுவித்துள்ளது. மேலும் தற்போது மிகப் பெரிய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா, அதன் ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கையை சுமார் 2 லட்சத்து 45 ஆயிரத்து 700 ஆகக் குறைத்துள்ளது.அதேபோல 2016க்கு பிறகு ஊழியர்களின் சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:நாடு நாடாக செல்லும் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே; அடுத்தது எங்கே செல்கிறார்?

கடந்த ஆண்டு இதே காலாண்டில் சீன நாட்டின் நாணயமான யுவான் மதிப்பில் 45.14 பில்லியன் ஆக இருந்த நிகர வருமானம், இந்த ஆண்டு 50 % ஆக குறைந்து, 22.74 பில்லியன் ஆக பெரும் அளவில் சரிந்துள்ளது.  இதனைதொடர்ந்து கடந்த ஜூலை மாதம், ஹாங்காங் பங்குசந்தையில், அலிபாபா நிறுவனம் முதன்மையான பட்டியலுக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை அறிவித்தது. இது முதல் முறையாக சீனாவின் பிரதான முதலீட்டாளர்களுக்கு பங்குகளை வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. 

இந்த நடவடிக்கையால் நியூயார்க் (NYSE) மற்றும் ஹாங்காங் பங்குசந்தைகளில் (Primary Listing) முதன்மைப் பட்டியல்களைக் கொண்ட முதல் பெரிய நிறுவனமாக அலிபாபா மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.அலிபாபா மற்றும் ஆண்ட் குரூப் போன்ற உள்நாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களை இணையத் துறையில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த சீன அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகின்றது. அதன் தாக்கத்தினால், இந்த நடவடிக்கையை அலிபாபா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க:adani: adani share : கவுதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் முடிவு

தற்போது இரட்டை முதன்மை பட்டியல்களை அனுமதிக்கும் புதிய விதியைப் பயன்படுத்தி, நியூயார்க் பங்குச் சந்தை மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தையில் அலிபாபா முதல் பெரிய இரட்டை முதன்மை பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது. இதனிடையே அலிபாபாவின் தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் ஜாங் கூறுகையில், "பரந்த மற்றும் பலதரப்பட்ட முதலீட்டாளர் தளத்தினை வளர்க்கும் வகையில், நிறுவனம் மற்றொரு முதன்மை பட்டியல் இடத்தைப் பின்பற்றுகிறது என்று கூறியுள்ளார்.
 

click me!