இத்தாலி நாட்டில் குரங்கம்மைக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் முதலில் 10 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டில் இருக்கும் ஸ்பால்லான்சானி மருத்துவமனை குரங்கம்மைக்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. சோதனை அடிப்படையில் முதலில் 10 பேருக்கு கடந்த திங்கள் கிழமை இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 200 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தி சோதிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த செய்தி ஜின்ஹூவா பத்திரிகையில் வெளியாகியுள்ளது. இந்தப் பத்திரிகை வெளியிட்டு இருக்கும் செய்தியில், ''இத்தாலியில் தயாராகி வரும் இந்த தடுப்பூசிக்கு ஜின்னியோஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி சின்னம்மையை கட்டுப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும், சின்னம்மை மற்றும் குரங்கம்மை பரப்பும் வைரஸ்களுக்குள் பெரிய வித்தியாசம் இல்லை. முதலில் பெரியவர்களுக்கு மட்டுமே இந்த தடுப்பூசி சோதிக்கப்படும். இரண்டு டோஸ்கள் செலுத்தப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
மக்களே உஷார்.! ஆணுறுப்பில் குரங்கம்மை புண்கள்.. ஆய்வில் வந்த அதிர்ச்சி முடிவுகள் !
உலகளவில் பெரிய அளவில் குரங்கம்மை பரவி வருவதால், தடுப்பூசிக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. பரிசோதனைக்கான தடுப்பூசி தேவையும் கடந்த திங்கள் கிழமை 600 ஆக அதிகரித்துள்ளது. முதன் முதலாக குரங்கம்மை மே மாதம் ரோம் நகரில் கண்டறியப்பட்டது. தற்போது வரை இத்தாலியில் மட்டும் 545 பேருக்கு குரங்கம்மை பரவி இருக்கிறது.
இந்த வகையான வைரஸ் பொதுவாக விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இருக்கும் வெப்பமண்டல வனப் பிரதேசங்களில் இந்த வகையான வைரஸ் பரவுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தோன்றுபவர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, உடலில் நீர் கொப்பளங்கள் உருவாகும்.
தற்போது ஆப்ரிக்க, அமெரிக்க நாடுகளிலும் பெரிய அளவில் இந்த வைரஸ் பரவி இருக்கிறது. இதையடுத்து குரங்கம்மையை உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் பிரகடனம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை.. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..