chinese spy ship in sri lanka: இலங்கையில் சீனாவின் ‘யுவான் வாங்-5’ உளவுக் கப்பல்: தெரியாத 10 விஷயங்கள்

By Pothy RajFirst Published Aug 17, 2022, 9:55 AM IST
Highlights

இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்து நங்கூரமிட்டுள்ள சீனாவின் அதிநவீன யுவான் வாங்-5 ரக கப்பல் குறித்து இந்தியாவும், அமெரிக்காவும் கவலைப்படுவது ஏன், அந்த கப்பலின் சிறப்பு அம்சங்கள் குறித்து காணலாம்.

இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்து நங்கூரமிட்டுள்ள சீனாவின் அதிநவீன யுவான் வாங்-5 ரக கப்பல் குறித்து இந்தியாவும், அமெரிக்காவும் கவலைப்படுவது ஏன், அந்த கப்பலின் சிறப்பு அம்சங்கள் குறித்து காணலாம்.

இலங்கையை பொருளாதார சிக்கலில் சிக்க வைத்ததில் பெரும் பங்கு சீனாவுக்கு உண்டு என்பதில் மிகையில்லை. இலங்கைக்குஇருக்கும் வெளிநாட்டுக் கடன்களில் பெரும்பகுதி சீனாவுக்குச் செலுத்த வேண்டியதாகும். 

கடந்த 2014ம் ஆண்டு  அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்  இலங்கை வருகைக்கு அந்நாடு சம்மதம் தெரிவித்தது. இந்தியா எவ்வளவோ கேட்டுக்கொண்டும் இலங்கை தன்னுடைய இறையாண்மையை காரணம் காட்டி சீனாவுக்கு அனுமதியளித்தது. அதுமுதல் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவில் சிறிய விரிசல் ஏற்பட்டது.

இந்திய, அமெரிக்க எதிர்ப்பை மீறி இலங்கை வந்தடைந்தது சீன உளவுக் கப்பல் யுவான் வாங் 5

இந்த விரிசலைப் பயன்படுத்திக்கொண்ட சீனா, "சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டியது". இலங்கைக்கு தேவையான நிதியுதவி, கடனுதவி, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல் போன்றவற்றை செய்து இலங்கையை கடனாளியாக்கியது.

இதனால் பாரம்பரியம் மிகுந்த ஹம்பன்தோட்டா துறைமுகத்தை 2017ம் ஆண்டு ராஜபக்ச காலத்தில் 99 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு லீசுக்கு வழங்கியது இலங்கை அரசு. இந்த துறைமுகத்தின் பெரும்பகுதி பங்குகளை சீனா வாங்கியது. 

99 ஆண்டுகள் சீனாவுக்கு லீசுக்கு வழங்கியதன் மூலம் இலங்கை தனது இறையாண்மைக்கு தானே தீ வைத்துக்கொண்டது. இதன்பின் இலங்கைக்கு உதவாத கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்து இலங்கையை பாதாளத்தில் தள்ளியது சீனா. 

இப்போதும் இலங்கைக்கு கடனுதவி வழங்கப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டுதான் யுவான் வாங்-5 என்ற அதிநவீன உளவுக் கப்பல் ஹம்பன்தோட்டா வந்துள்ளது. 

இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா, அமெரிக்கா கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததால்  .  யுவான் வாங்-5 கப்பலை ஹம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வருவதற்கு இலங்கை அனுமதியளிக்காமல் காலம் தாழ்த்தியது. 

சீனா-வுக்கு பதிலடி: இலங்கை கடற்படைக்கு டோர்னியர் கண்காணிப்பு விமானத்தை பரிசாக வழங்கியது இந்தியா

பொறுமையாக இருந்த சீனா, தனது உரிமையை நிலைநாட்டும் வகையில் இலங்கையைக் கண்டித்தது.  தீவிரமான ஆலோசனைக்குப்பின் சீனாவின் உளவுக் கப்பல் ஹம்பன்தோட்டாவுக்கு வந்துள்ளது.

யுவான் வாங்-5 கப்பலின் சிறப்பு என்ன

1.    யுவான் வாங்-5 எனும் கப்பல் இரட்டை வேவுபார்க்கும் கப்பல். அதாவது, ஆராய்ச்சி மற்றும் சர்வே செய்யக்கூடியது. கண்டங்களுக்கு இடையே செல்லும் ஏவுகணைகளைக் கண்காணிக்கவம், செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் கப்பலாகவும் இருக்கிறது.

2.    சீனாவின் ராணுவத்தில்  ஸ்டார்டர்ஜிக் சப்போர்ட் போர்ஸ்(எஸ்எஸ்எப்) என்ற பரிவு இருக்கிறது. இந்தப்பிரிவுதான் விண்வெளி, சைபர், மின்னணு அம்சங்களை கண்காணிக்கிறது. எஸ்எஸ்எப் தலைமையின் கீழ் சீனாவின் பீப்பிள் லிபரேஷன் ஆர்மி கப்பலை இயக்குகிறது

3.    கடந்த 2007ம் ஆண்டு,செப்டம்பர் 29ம் தேதி யுவான் வாங்-5 கப்பல் சீனாவின் படையில் சேர்க்கப்பட்டது. இந்த கப்பல் 3வது தலைமுறைக்கான யுவான் வாங் சீரிஸ் தொழில்நுட்பங்களைக் கொண்டது.

4.    சீனாவின் 708 ஆய்வு நிறுவனத்தால் ஜியான்கான் கப்பல் கட்டும் தளத்தில் யுவான் வாங்-5 கப்பல் கட்டப்பட்டது.

இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன உளவு கப்பலுக்கு அனுமதி... இலங்கை செயலால் இந்தியாவுக்கு ஆபத்தா?

5.    இந்தப் கப்பலில் மிகவும் உயர்ந்த தரமுடைய ஏவுகணையை ஏவும் தளம் இருக்கிறது. எதிரிநாட்டு ஏவுகணைகள்,ராக்கெட்டுகளை கண்காணிக்க அதிநவீன ஆன்டெனா, தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

6.    அமெரி்க்கா, பிரான்ஸ், இந்தியா,ரஷ்யா,போன்ற நாடுகள் பெரும்பாலும் இந்த கப்பலை ராணுவத்துக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

7.    அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றில் கண்காணிப்பு பணிக்காக இதுபோன்ற 7 வகைக் கப்பலை சீனா பயன்படுத்தி வருகிறது.

8.    யுவான் வாங்-5 கப்பல் 22 மீட்டர் நீளமுடையது,25.2 மீட்டர் அகலமுடையது.

9.    யுவான் வாங்-5 கப்பல் சமீபத்தில் சீனா ஏவிய லாங் மார்ச் 5பி ராக்கெட்டை கண்காணித்தது. சீனாவின் தியாகாங் வான்வெளி நிலையத்தை கண்காணிக்கவும் கப்பல் பயன்பட்டது.

10.    இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்துள்ள சீன கப்பல் வரும் ஒருவாரம் வரை இருக்கும்.

இந்தியாவுக்கு ஏன் கலக்கம்

சீனாவின் யுவான் வாங்-5 கப்பல் உளவு பார்ப்பதில் கில்லாடி, சக்திவாய்ந்தது. நங்கூரம் இடப்பட்ட இடத்திலிருந்து 750 கி.மீ சுற்றளவுக்கு அதன் ரேடாரால் கண்காணிக்க முடியும். சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணு மின்நிலையம், தென் இந்தியாவில் உள்ள 6 துறைமுகங்கள், கொச்சியில் உள்ள கப்பற்படைத் தளம் ஆகியவற்றை கூர்மையாக கண்காணிக்க இந்தக் கப்பலால் முடியும். 

சிங்கப்பூரில் தங்குவதற்கான அவகாசம் முடிந்தது… தாய்லாந்துக்கு சென்றார் கோட்டபய ராஜபக்சே!!

குறிப்பாக தமிழகம், கேரளா, ஆந்திரா துறைமுகங்களை சீனாவால் கண்காணிக்க முடியும். தென் இந்தியாவில் மத்திய அரசு செய்யஇருக்கும், செய்துவரும் கட்டமைப்புகள், திட்டங்கள் அனைத்தும் உளவு பார்க்கப்படும் என்று இந்தியா அஞ்சுகிறது.

ஆய்வாளர்கள் மற்றும் வல்லுநர்கள் கூறுகையில் “இந்திய-பசிபிக் பெருங்கடலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாகவே சீனா இதில் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சிக்கு கடந்த 3 ஆண்டுகளாக சீனாவுக்கு பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குவாட் அமைப்பை இந்தியா தொடங்கி ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்காவின் ஆதரவோடு இருந்து வருகிறது” எனத் தெரிவித்தனர். 

சீனாவின் பதில் 

சீன அரசு தங்களின் யுவான் வாங்-5 கப்பல் எந்த நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்காது எனத் தெரிவித்துள்ளது. சீன வெளியறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில் “ ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் யுவான் வாங்-5 கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு தேவையான உதவிகலை செய்ய இருக்கிறோம்.

பாகிஸ்தான் தீவிரவாதிக்கு சீனா ஆதரவு: இந்தியா, அமெரிக்கா முயற்சிக்கு முட்டுக்கட்டை

எங்களின் இந்தக் கப்பல் கடல்சார் ஆராய்ச்சியிலும் அது சார்ந்த பணிகளிலும் ஈடுபடும்.சர்வதேச சட்டங்கள், வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றுவோம். எந்த நாட்டின் பொருளாதாரத்தையும், பாதுகாப்பையும் எங்கள் கப்பல் சீர்குலைக்காது. எந்த 3-வது நபரும் தடை செய்யக் கூடாது”எ னத் தெரிவி்த்தார்


 

click me!