ரஷ்யாவில் மக்கள்தொகையை பெருக்கும் நோக்கில் அதிபர் விளாடிமிர் புடின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்று வளர்க்கும் தாய்மார்களுக்கு இந்திய மதிப்பில் 13 லட்சம் பணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை குறைந்து வருகிறது. 2019 இறுதியில் ஏற்பட்ட கொரோனா பெருந்துதொற்றைத் தொடர்ந்து, தற்போதுவரை ராஷ்யாவில் சுமார் 4 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, ரஷ்யாவில் மக்கள் தொகையை பெருக்கும் விதமாக ரஷ்ய பெண்கள் 10க்கும் அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.13 லட்சம் பணமும் ’மதர் ஹீரோயின்’ என்ற பட்டமும் வழங்கப்படும் என அதிபர் புடின் அறிவித்துள்ளார்.
ஸ்டாலின் திட்டம் மீண்டும் நடைமுறை!
இந்த திட்டம் புதிது ஒன்று அல்ல, ஏற்கனவே நடைமுறையில் இருந்தது என வரலாறு சொல்கிறது. இரண்டாம் உலகப்போரில் ரஷ்ய மக்கள் ஏராளமானோர் செத்து மடிந்தனர். இதனால் அங்கு தொகை பெருமளவு குறைந்தது. அப்போது ஒன்றிய ரஷ்யாவின் ஸ்டாலின், மக்கள் தொகையை பெருக்கும் நோக்கில் இதே திட்டத்தை அறிவித்திருந்தார். பின்னர், சோவியத் ரஷ்யா உடைந்து பல நாடுகளாக பிரிந்ததைத் தொடர்ந்து இந்த திட்டம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.