வேலை செய்யுங்கள்; இல்லாவிட்டால் வீட்டுக்கு செல்லுங்கள்… இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அதிரடி!!

By Narendran S  |  First Published Aug 22, 2022, 4:50 PM IST

நாட்டின் நலனுக்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே எதிர்கால நோக்கமாகும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.


நாட்டின் நலனுக்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே எதிர்கால நோக்கமாகும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணையுமாறு எவரையும் நான் கூறவில்லை. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு காலதாமதமின்றி அனைவரும் ஒன்றிணைய அழைப்பு விடுக்கிறேன். நான் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக அனுராதபுரத்திற்கு வந்தேன். இது ஒரு மரபு. புனித பல்லக்கு ஆசிர்வாதம் பெற கண்டி செல்கிறோம். அதேபோன்று, புனித ஸ்ரீ மஹா போதியாவின் ஆசிகளைப் பெறுவதற்காக நான் அனுராதபுரத்திற்கு வந்துள்ளேன். அனுராதபுரம் ரஜரட்ட இராச்சியத்தின் தலைநகராக இருந்தது. இது எங்கள் ஆரம்பம். 21ம் நூற்றாண்டுக்கு ஏற்ற சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறோம். அந்தச் செயற்பாடுகளுடன் இங்கு ஆரம்பித்த எமது நாகரீகத்தை நாம் மறக்க முடியாது. இதை மனதில் வைத்து நாம் முன்னேற வேண்டும். அநுராதபுரம் மாவட்டத்தைப் பார்க்கும் போது, இந்த மாகாணத்தில் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று உணர்கிறேன். அனுராதபுரத்தையும் கண்டியையும் இந்நாட்டின் முக்கிய சுற்றுலா மையமாக மாற்ற விரும்புகிறோம். இம்மாகாணத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அரை நாளில் தங்கள் பயணத்தை முடித்து விடுகின்றனர். நைல் பள்ளத்தாக்கிலிருந்து பண்டைய எகிப்திய ராஜ்யங்களைப் பார்வையிட ஒரு வாரம் ஆகும்.

இந்தியாவின் டாப் தலைவர் டார்கெட்.. திட்டமிட்ட ஐஎஸ்ஐஎஸ்! தீவிரவாதி கைது.. யார் அந்த தலைவர் ?

Tap to resize

Latest Videos

ஆனால் அவர்கள் நமது புராதன இடங்களில் அரை மணி நேரம் செலவிடுவதில்லை. இதை மாற்ற வேண்டும். அனுராதபுரம் ஒரு வகையில் புனித நகரம். மறுபுறம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வரலாற்று நகரமாக மாற்றப்பட வேண்டும். இதற்காக அனைத்து துறைகளிலும் ஒரு குழுவை நியமிப்பேன். பிரான்ஸ் அல்லது வேறு நாட்டிலிருந்து ஆலோசகர்களை வரவழைத்து, இந்த அனுராதபுர நகரை எப்படி கலாச்சார மற்றும் வரலாற்று சுற்றுலா மையமாக மாற்றுவது என்பது பற்றி பேசுவோம். இது அனுராதபுரத்திற்கு புதிய பொருளாதாரத்தை வழங்கும். ஜப்பான், தென் கொரியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நம் நாட்டிற்கு வருகிறார்கள். பெரிய ஆலயத்தின் (மஹா விகாரை) அகழ்வாராய்ச்சி இன்று முக்கிய நிகழ்வாக இடம்பெற்று வருகின்றது. இன்று நாட்டு மக்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். அப்போது அத்தகைய அழுத்தம் இல்லை. அந்த நிலையிலிருந்து நாம் வெளியேற வேண்டும். கடந்த ஆண்டை விட நமது பொருளாதாரம் 8% குறைவாக உள்ளது. இது வேகமாக நடக்கிறது, அதன் விளைவுகளை அனைவரும் அனுபவிக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், அதை மாற்றியமைக்க மற்றும் வளர்ச்சிக்கான வழிகளைக் கண்டறிய முயற்சிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியை எங்கு தொடங்கலாம் என்பதை நாம் பார்க்க வேண்டும். ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுக்கும் சுமார் ஒன்பது அதிகாரிகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இலங்கை மக்கள் கண்ணீர்! மண்எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு

ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பிரிவு ஒதுக்கப்படும் வகையில் அவர்களின் பிரிவுகளை பிரிக்குமாறு நான் அவர்களை வலியுறுத்துகிறேன். நீங்கள் வேலை செய்ய விரும்பினால், வேலை செய்யுங்கள். இல்லாவிட்டால் வீட்டுக்கு செல்லுங்கள். எதற்காகவும் உங்களுக்கு பணம் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. மாவட்டச் செயலாளர்கள் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும். எங்களால் யாருக்கும் இலவசமாக உணவளிக்க முடியாது. அவர்கள் ஏதாவது ஒரு வகையில் பங்களிக்க வேண்டும். நாங்கள் பணம் செலுத்த வேண்டும், ஒன்றும் செய்யாததால் என்னால் கூட சாப்பிட முடியாது. இந்த நாட்டை அபிவிருத்தி செய்யாவிட்டால் நானும் வீட்டிற்கு செல்ல வேண்டியிருக்கும். எனவே, கிராமத்தில் இருந்து தொடங்குவோம். இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம். நாம் இணைந்து பணியாற்றும்போது, புதிய அரசியல் கோட்பாடு நமக்குக் கிடைக்கும். பழைய பாதையில் பயணிக்க முடியாது. ஒரு புதிய முறையை பின்பற்றுவோம். நாம் ஒரு கலாச்சார மற்றும் அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இன்று வாக்களிக்கச் சென்று ஆட்சியைப் பெற்றுவிடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம். இதுதான் உண்மை. உண்மையைப் பேசுவோம். எனவே, அனைவரும் பொறுப்புடன் ஏற்றுக்கொண்டு செயல்படுவோம் என்று தெரிவித்தார்.

click me!