ஆனந்த் அம்பானி துபாயில் ஷாப்பிங்! ரோல்ஸ் ராய்ஸ் காருடன் வரிசை கட்டி வந்த 20 கார்கள்!

By SG Balan  |  First Published Apr 8, 2024, 3:43 PM IST

வீடியோவில், துபாயில் ஆனந்த் அம்பானியுடன் அணிவகுத்துச் சென்ற எல்லா கார்களையும் காண முடிகிறது. ஆனந்த அம்பானியின் ஆரஞ்சு நிற ரோல்ஸ் ராய்ஸ் தவிர மற்றொரு வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் காரும் இருக்கிறது.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன், தொழில் அதிபர் ஆனந்த் அம்பானி சமீபத்தில் துபாயில் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஷாப்பிங் செய்யப் போன வீடியோ வைரலாகி இருக்கிறது.

ஆனந்த் அம்பானியின் பாதுகாப்புக்காக அவரை ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பின்தொடர்ந்து வந்த சுமார் 20 கார்களும் பெரும்பாலும் சொகுசு எஸ்யூவி கார்கள். இவ்வளவு பாதுகாப்புடன் சென்ற ஆனந்த் அம்பானி ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் இருந்து ஷாப்பிங் மாலில் இறங்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Tap to resize

Latest Videos

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியதால், இவ்வளவு பாதுகாப்புடன் போய் ஆனந்த் அம்பானி என்ன வாங்கினார் என்று நெட்டிசன்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். பலருக்கும் அவருக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பைக் குறிப்பிட்டு வியப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

வாட்ஸ்அப் கால் மூலம் வரும் ஆபத்து! மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை! நம்பரை பார்த்து சுதாரிச்சுக்கோங்க...

The Ambani family, the richest in Asia, driving through Dubai with 20 cars in their convoy pic.twitter.com/Ge3SlyN72x

— Historic Vids (@historyinmemes)

வீடியோவில், துபாயில் ஆனந்த் அம்பானியுடன் அணிவகுத்துச் சென்ற எல்லா கார்களையும் காண முடிகிறது. ஆனந்த அம்பானியின் ஆரஞ்சு நிற ரோல்ஸ் ராய்ஸ் தவிர மற்றொரு வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் காரும் இருக்கிறது. இந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்களுடன், காடிலாக் எஸ்கலேட்ஸ், ஜிஎம்சி யூகோன் டெனாலிஸ் மற்றும் செவ்ரோலெட் சபர்பன்ஸ் போன்ற பல எஸ்யூவிகளும் உள்ளன. இந்த வாகனங்கள் அனைத்திலும் அவரது பாதுகாப்பு குழுவினர்தான் சென்றுள்ளனர்.

இந்தியாவில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரின் ஆரம்ப விலை ரூ.8.20 கோடி. இது எக்ஸ்-ஷோரூம் விலைதான். ஆன்-ரோடு விலை இன்னும் சில கோடிகள் கூடுதலாக இருக்கும். அம்பானி குடும்பத்தின் ரோல்ஸ் ராய்ஸ் கார் சேகரிப்பு மிகவும் பிரபலம். அம்பானி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல மாடல்களில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கியிருக்கிறார்கள்.

குஜராத்தின் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருக்கு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற்றதை அடுத்து, இந்த சம்பவம் துபாயில் நடந்துள்ளது.

மீண்டும் எலான் மஸ்க்கை முந்திய மார்க் ஜூக்கர்பெர்க்! 2020க்குப் பின் முதல் முறை!

click me!