Singapore News : சிங்கப்பூர் Istana அரங்கம் தீபாவளி திருநாள் அன்று மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் என்றும், மேலும் நவம்பர் 12ம் தேதி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அங்கு நடைபெறும் என்றும் சிங்கப்பூர் அரசு முன்வே அறிவித்தது.
இந்நிலையில் சிங்கப்பூரின் அதிபராக தனது முதல் தீபாவளியை கொண்டாடும் தர்மன் சண்முகரத்தினம், கடந்த நவம்பர் 12ம் தேதி Istana அரங்கில் நடந்த நிகழ்வுகளில் பங்கேற்று தனது தீபாவளி வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்தார். சுமார் 15,000 பேர் தீபாவளி திருநாளில் Istana அரங்கை பார்வையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்தானா என்பது சிங்கப்பூர் அதிபரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அலுவலகம் ஆகும். இந்த அரண்மனை போன்ற இடம், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பொது விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் மற்றும் சிங்கப்பூர் அதிபர், தனது அரச விருந்தினர்களை வரவேற்று உபசரிக்கும் இடமாகவும் திகழ்கிறது.
இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சராக டேவிட் கேமரூன் நியமனம்!
அதிபர் தர்மன் சண்முகரத்தினம் மற்றும் அவரது மனைவி திருமதி ஜேன் இட்டோகி ஆகியோர் தீபாவளி திருநாளன்று காலை மற்றும் மதியம் பொதுமக்களுடன் சந்திப்பு மற்றும் வாழ்த்து அமர்வுகளை நடத்தினர். சிங்கப்பூரின் புதிய அதிபராக திரு. தர்மன் சண்முகரத்தினத்தின் முதல் இஸ்தானா திறந்த இல்ல நிகழ்வு இதுவாகும்.
செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் தர்மன், தீபாவளி என்பது பலவகைகளில் பல இனங்களைக் கொண்ட கொண்டாட்டமாகும் என்றார். இந்திய மற்றும் சீன பாரம்பரிய இசையின் ஒற்றுமை நிகழ்வாக உள்ளூர் விருது பெற்ற புல்லாங்குழல் கலைஞர்களான கானவேனோதன் ரெட்னம் மற்றும் டான் கிங் லூன் ஆகியோரால் இஸ்தானாவில் இசை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது.
சிங்கப்பூர் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் இசைக்கருவி மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டதைக் குறிப்பிட்ட அதிபர் தர்மன், இந்திய சமூகத்திற்குள் தனித்துவமான கலாச்சாரங்கள் இருப்பதாகக் கூறினார்.