இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவியை பறித்த பிரதமர் ரிஷி சுனக்!

By Manikanda Prabu  |  First Published Nov 13, 2023, 3:24 PM IST

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனை அப்பதவியில் இருந்து பிரதமர் ரிஷி சுனக் நீக்கியுள்ளார்


பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் தனது உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேனை பதவி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். பாலஸ்தீன ஆதரவு அணிவகுப்பை இங்கிலாந்து காவல்துறை கையாண்டதை விமர்சித்ததையடுத்து, எழுத்த அழுத்தத்தின் காரணமாக அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுயெல்லா பிராவர்மேனை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவரது சொந்த ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக பிரதமர் ரிஷி சுனக் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அமைச்சரவையில் பெரிய மாற்றம் இருக்கும் எனவும், அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக சுயெல்லா பிராவர்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிகிறது.

Latest Videos

undefined

சுயெல்லா பிரேவர்மேனை பதவி நீக்கம் செய்யும் உத்தரவை அவர் ஏற்றுக் கொண்டார் எனவும், அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லி புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோடி அரசின் துரோகம்: வெறுப்பில் இளைஞர்கள் - காங்கிரஸ் காட்டம்!

ரிஷி சுனக் தனது அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதற்கு இடையே, முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனை டவுனிங் தெருவில் அடிக்கடி காண முடிகிறது. இது, அவர் மீண்டும் அமைச்சரவைக்கு வர வாய்ப்புள்ளதாக ஊகத்தைத் தூண்டியுள்ளது.

கடந்த வாரம் கட்டுரை ஒன்றில், “போராட்டங்களை நடத்துவதில் போலீஸ் இரட்டை வேடத்தை கடைப்பிடிக்கின்றனர்.” என சுயெல்லா பிரேவர்மேன் குற்றம் சாட்டினார். இது, பாலஸ்தீன ஆதரவு அணிவகுப்பில் பதற்றங்களை தூண்டியதாக பிரதான எதிர்க்கட்சியாக தொழிலாளர்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பாலஸ்தீன ஆதரவு அணிவகுப்பில் சுமார் 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீவிர வலதுசாரி அமைப்பினர், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது அமைச்சரவையில் பல மாற்றங்களைச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளிப்பார் எனவும், சில அமைச்சர்களை நீக்குவார் என்று அவரது டவுனிங் தெரு வட்டாரங்கள் கூறுகின்றன.

ரிஷி சுனக்கை போலவே சுயெல்லா பிரேவர்மேனும் இந்திய வம்சாவளியை சார்ந்தவர். போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னதாகவே பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை முதலில் அறிவித்த சுயெல்லா பிரேவர்மேன், இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான ரேஸிலும் இருந்தவர்.

click me!