தாய்லாந்து மன்னர் பூமிபால் மரணம் நீண்டகால மன்னராட்சி நிறைவடைந்தது

Asianet News Tamil  
Published : Oct 14, 2016, 10:12 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
தாய்லாந்து மன்னர் பூமிபால் மரணம் நீண்டகால மன்னராட்சி நிறைவடைந்தது

சுருக்கம்

 

பாங்காக், அக். 14:-

தாய்லாந்து நாட்டின் மன்னர் 88 வயதான பூமிபால் அதுல்யதேஜ் உடல்நலக்குறைவால் பாங்காக்கில் உள்ள சிறிராஜ் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.

 

மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் (வயது 88). கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னராக பதவி வகித்து வந்த அவர், கடந்த சில மாதங்களாக பல்வேறு உடல் நலக்கோளாறுகள் காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வந்தார். ஒருசில பொது நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வந்தார்.

சில நாட்களுக்கு முன் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. அவர் நலம்பெற வேண்டி பொதுமக்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை முன்பும் ஏராளமானோர் திரண்டு பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் சிகிக்சை பலனளிக்காமல், நேற்று மாலை உயிரிழந்தார் என அரண்மனை செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மன்னப் மரணமடைந்த  செய்தி கேட்டு மக்கள் கதறி அழுதனர், சாலைகளிலும், மருத்துவமனை முன்பும், மன்னரின் படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

 

இவருடைய ஆட்சிக் காலத்தில்தான், தாய்லாந்து நாடு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்தது. அரிசி என்பது இவர்களது கனவாகவே இருந்தது. இன்று உலகிலேயே அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் தாய்லாந்தும் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 இவருக்குப் பின்னர் அவரது மகனும், இளவரசருமான வஜிரலாங்கோர்ன் மன்னராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

PREV
click me!

Recommended Stories

நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!