ஹபீசுக்கு இந்தியாவுடன் அமைதி தேவை ; மசூத் அசாருக்கு போர் வேண்டுமாம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இடையே மாறுபட்ட கருத்து

Asianet News Tamil  
Published : Oct 14, 2016, 10:06 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
ஹபீசுக்கு இந்தியாவுடன் அமைதி தேவை ; மசூத் அசாருக்கு போர் வேண்டுமாம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இடையே மாறுபட்ட  கருத்து

சுருக்கம்

 

இஸ்லாமாபாத், அக். 14:-

இந்தியாவால் தேடப்பட்டு வரும் இரு முக்கிய பாகிஸ்தான் தீவிரவாதிகளான ஹபிஸ் சயீத் மற்றும் ஜெயிஷ் இ முகமது தலைவர் மசூத் அசார் ஆகியோர் இந்தியாவுடனான நிலைப்பாட்டில் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுடன் போர் புரிய வேண்டும் என மசூத் அசாரும், இந்தியாவுடன் அமைதியாக, இணக்கமாக போக வேண்டும் என ஹபிஸ் சயித்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.

துணிச்சல் இல்லை

ஜெயிஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் சமீபத்தில் ஒரு நாளேட்டுக்கு தெரிவித்த பேட்டியில், “ தீர்க்கமான முடிவு எடுக்கும் திறன் பாகிஸ்தானுக்கு இல்லாததால் காஷ்மீரைக் கைப்பற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பை இழந்துவிட்டது. காஷ்மீர் பிரச்சினை, சிந்து நிதிநீர் பங்கீடு பிரச்சினை ஆகியவற்றில் பாகிஸ்தான் அரசு சிறிது துணிச்சலாக செயல்பட்டு இருந்தால் கூட நாம் பிரச்சினையை தீர்த்திருக்க முடியும்.

தீவிரவாத வழி

எதுவுமே பாகிஸ்தான் அரசால் முடியாவிட்டால், தீவிரவாதிகளுக்கான வழியையாவது திறந்துவிடுங்கள். கடவுள் நினைத்தால், கடந்த 1971-ம் ஆண்டு போரில் தோற்றதுபோல் இல்லாமல், 2016ம் ஆண்டு சிறப்பான போராக அமையும்'' எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், மசூத் அசாருக்கு மாறுபட்ட வகையில், மும்பை தீவிரவாத தாக்குதல் மூளையாகச் செயல்பட்ட ஹபிஸ் சயித் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் நட்பு

ஹபிஸ் சயித் ஒரு நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், “ அமெரிக்காதான் பாகிஸ்தானின் முக்கிய எதிரி. அமெரிக்கா மீது கவனம் செலுத்துவதற்கு பதிலாக, இந்தியாவுடன் நட்புறவை வளர்ப்பதில் பாகிஸ்தான் அரசு கவனம் செலுத்த வேண்டும். ஆனால், பாகிஸ்தானின் அந்த முயற்சியை அமெரிக்கா தடுக்கும்.

காஷ்மீர் பிரச்சினை

காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் அரசு மோசமாக செயல்பட்டு கடந்த 3 மாதத்தை வீணாக்கிவிட்டது. காஷ்மீரில் மக்கள் மடியும் போது, நாடாளுமன்றத்தில் எம்.பி.கள் அமர்ந்து இருந்தனர். இதற்காகவா நாங்கள் வாக்களித்தோம்.
 

இவர்கள்தான் உண்மையாகவே தடையாக இருப்பவர்கள். அமெரிக்காவுக்கான வழியை எதிர்பார்த்து இருக்கிறார்கள்'' என தெரிவித்தார் என்று இந்தியா டுடே பத்திரிகை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே சமீபத்தில் கருத்து மோதல்கள், பிளவு ஏற்பட்டுள்ளதாக வந்த செய்தியைத் தொடர்ந்து இரு தீவிரவாத குழுக்களும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!