இறந்த போன டயானாவையும் விட்டு வைக்கவில்லை : ‘கிலுகிலுப்பாகப்’ பேசி கையை பிசையும் டிரம்ப்

Asianet News Tamil  
Published : Oct 14, 2016, 05:42 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
இறந்த போன டயானாவையும் விட்டு வைக்கவில்லை : ‘கிலுகிலுப்பாகப்’ பேசி கையை பிசையும் டிரம்ப்

சுருக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இப்போது “ஹாட் டாபிக்” என்ன? என்று கேட்டால், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பெண்கள் குறித்து பேசிய ஆபாசமான பேச்சு அடங்கிய வீடியோ வெளியானதுதான்.

“வாஷிங்டன் போஸ்ட்” நாளேடு டிரம்பை கட்டம் கட்டி இந்த வீடியோவை வெளியிட்டு சத்தமில்லாமல் இருந்துகொண்டது. ஆனால், டொனால்ட் டிரம்ப்பை அவரின் மனைவி மெலினா டிரம்ப் உள்பட அமெரிக்காவில் உள்ள அனைத்து பெண்களும், “கழுவி ஊற்றி” வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தை தனது சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் எப்போதும் களேபரமாக்கி வருபவர் டிரம்ப். வாயை திறந்தால் மனுசனுக்கு, “வெடிகுண்டு வார்த்தைகள்” தான் வெளியில் வந்து விழுகிறது. 

தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்தே, ‘மெக்சிக்கோ சுவர் பிரச்சினை’, ‘முஸ்லிம்களுக்கு தடை கொண்டு வருவது’, ‘ஐ.எஸ். தீவிரவாதம்’, ‘மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்வது’ என கொடூரமான வார்த்தைகளை டிரம்ப் பிரயோகம் செய்து அனைவரின் கண்டனத்தையும் வாங்கிக் கட்டிக்கொண்டார். 

ஆனால், என்ன பன்றது… “தவளையும் தனது வாயால் கெடும்“ என்பார்களே அதுபோல், என்றோ பேசிய பேச்சு இப்போது டிரம்புக்கு வினையாக வந்து, அவரின் தேர்தல் வெற்றியை ஆட்டம் காண வைத்துள்ளது. 

பெண்கள் குறித்து டிரம்ப் கடந்த 2005-ம் ஆண்டு பேசிய வீடியோ வெளியானது முதல் அமெரிக்காவே அவரை வறுத்து எடுக்கிறது. கடந்தவாரம் வரை டிரம்புடன், உட்கார்ந்து சிரித்து பேசிய காபி குடித்துவிட்டுபோன, , குடியரசுக் கட்சியின் மூத்ததலைவரும், டிரம்புக்கு தீவிரமாக ஆதரவு தெரிவித்தவரான ஜான் மெக்கெயின் கூட ஆதரவை திரும்பப்பெறுகிறேன் என சொல்லிவிட்டார். 

இதனால், “பேஸ்மட்டம் வீக் பில்டிங் ஸ்டிராங்” என்ற கணக்கில் முகத்தில் பயத்தை காட்டாமல் டிரம்ப் பிரசாரம் செய்து வருகிறார்.

அப்படி என்னதான் பெண்களைப் பற்றி டிரம்ப் பேசியிருப்பார்….. இதோ….

 

கடந்த 2005-ம் ஆண்டு, வாஷிங்டனில் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு முன், “கேரவேனில்” டிரம்ப்பும், நிகழ்ச்சி தொகுப்பாளரான பில்லி புஷ்சும் பேசிக்கொண்டது தான் இப்போது பத்திக்கிட்டு எரியுது.

கோடீஸ்வரரான டிரம்ப் பெண்கள் என்றாலே “ஜாலி” என்ற மனநிலையில் இருப்பவர். இதற்காகவே விருது வழங்கும் விழா, உலக அழகி விழா என எதையாவது அவ்வப்போது நடத்தி, அதில் வரும் பெண்களை தனது கட்டிலுக்கு இரையாக்கி வருபவர். 

கேரவேனில் பில்லி புஷ்சிடம் பெண்கள் குறித்து டிரம்ப் பேசியது “ நான் நான்சியை(2007 அமெரிக்க அழகி) பாம் பீச்சுக்கு அழைத்துக்கொண்டு போனேன். அவளை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்ற வேகத்தில் பல முயற்சிகள் செய்தேன்.

எதையாவது வாங்கிக் கொடுத்தாவது அவளுடன் “உல்லாசம்” அனுபவிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பர்னிச்சர் கடைக்கு கூட ஒரு விலைமாது போல் அழைத்துச் சென்றேன். முதலில் முடியாது என்று சொன்னவள். கடைசியில் என் வழிக்கு வந்துவிட்டாள் “ என்று டிரம்ப் கூறியவுடன் தைட்டி எக்காளமிட்டு டிரம்ப்பை பாராட்டுகிறார்கள்.

“ நான் அவளை முதலில் முத்தமிட முயன்றேன். அவள் திருமணமானவள் என்பதால் சம்மதிக்கவில்லை. பின் ஒத்துக் கொண்டதும் தாமதிக்காமல் முத்திமிட்டுவிட்டேன்”.

உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்… நீங்கள் புகழ்பெற்றவராக, ஒரு ‘ஸ்டார்’ போன்ற ஆளுமை கொண்டவராக இருந்தால்  பெண்களை எளிதாக வளைத்து விடலாம். பெண்களை என்ன வேண்டுமானாலும்…………….செய்யலாம். என சொல்லி சிரிக்கிறார்.

அதுமட்டுமா, நிகழ்ச்சிக்கு வரவேற்க வந்த ஆரியானா ஜக்கர் என்ற பெண்ணை, டேட்டிங்குக்கு என்னுடன் வருகிறாயா?, அல்லது பில்லி புஷ்சுடன் செல்கிறாயா? என அவளிடம் டிரம்ப் கேட்டு ஜொல்லுவிடும் காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. ஆரியானா ஜக்கரின்  உடம்பை பில்புஷ்சிடம் டிரம்ப் வர்ணிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. 

இதுமட்டுமல்ல பெண்களிடம் முறைதவறி நடந்துகொள்வது, மடிந்தால் உல்லாசம் அனுபவித்துவிடுவது, இல்லாவிட்டால், மன்னிப்பு கேட்டு தப்பித்துச் செல்வது என்பது டிரம்ப்பின் கடந்த கால வாடிக்கையான செயலாக இருந்துள்ளது. 

இது குறித்து “தி நியூயார்க் டைம்ஸ்” நாளேட்டில் வந்துள்ள செய்தியில், ஒருமுறை வர்த்தகம் சம்பந்தமாக பேச வந்த ஜில் ஹாரத் என்ற பெண்ணை டிரம்ப் “எக்கு தப்பாக தொட்டு”, உல்லாசம் அனுபரிக்க முயற்சித்தார். உடனே அந்த பெண் போலீசில் புகார் செய்துவிட்டு, தான் பேச வர்த்தக ஒப்பந்தத்தையும் முறித்துச் சென்றார்.

டிரம்பின் சேட்டைத் தனமும், விஷமத்தனமான பேச்சும் இதோடு மட்டும் நிற்கவில்லை. மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் உடல் அழகை வெளிப்படையாக விமர்சனம் செய்து சிக்கலில் மாட்டியுள்ளார். “ அழகு என்றால் டயானாதான். என்ன உடல், என்ன கலர், என்ன உயரம், டயானாவுடன் ஒருநாளாவது நான் படுக்கையை பகிர்ந்து கொள்ள நினைத்தேன்” என டயானா இறப்புக்குபின் டிரம்ப் பேசி சர்ச்சையில் சிக்கினார். 

அதுமட்டுமா, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அசிங்கமானவள். நடிகை ஹெய்தி குலும் எதற்கும் ஆகாதவர். இவளால் ஒன்றும் பயனில்லை. எனக்கு பெண்கள் பன்றி போல், கொழுத்துப் போய் இருந்தால் பிடிக்கவே பிடிக்காது. அவர்களை நான் வெறுக்கிறேன் என்று விமர்சனம் செய்து சிக்கலில் சிக்கியவர் டிரம்ப். 

டிரம்ப் தான் பெற்ற மகளைக் கூட விட்டு வைக்கவில்லை. “ என் மகள் இவாங்கா இப்போதுதான் பார்க்க சூப்பராக இருக்கிறார். இவள் மட்டும் எனது மகளாக இல்லாமல் இருந்திருந்தால், நிச்சயம் இவளோடு டேட்டிங் வைத்து, எனது காரியத்தை முடித்திருப்பேன்” என்று கடந்த ஆண்டு ஒரு விழாவில் பேசினார்.  

மன்மத ராசா போல் இப்படி பேசிவிட்டு 90 விநாடிகள் ஓடும் வீடியோவில்  தனது அனைத்து ஆதரவாளர்களிடமும் கடந்தவாரம்  மன்னிப்பு கேட்டுக் கொண்டார் டிரம்ப். நானும், பில்லிபுஷ்சும் பேசியது தனிப்பட்ட பேச்சு இதை பெரிது படுத்தாதீர்கள். எனது பேச்சுக்கு வருந்துகிறேன் என்றார்.

அமெரிக்க பெண்களுக்கு கலாச்சாரம், கற்பு எங்கு இருக்கப் போகிறது,  எனப் போகிற போக்கில் பேசிவிட்டார். டிரம்ப். ஆனால் அவமதித்து பேசியது பெண்களை அல்லவா. எந்த நாட்டுக்குச் சென்றாலும் பெண்கள் பெண்கள் தானே.

பெண்களுக்கென இருக்கின்ற மதிப்பை குறைத்து மதிப்பிட முடியுமா?

பெண்களின் வலிமை என்னவென்று இனி தேர்தலில் டிரம்புக்கு தெரியத்தான் போகிறது.

 தேர்தலில் இனி டிரம்புக்கு ஜெயிப்பார்னு நினைக்கிறீ்ங்களா

PREV
click me!

Recommended Stories

நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!