வெறும் 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள டெய்லரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் 740 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது.
புகழ்பெற்ற அமெரிக்க பாடகி டெய்லர் அலிசன் ஸ்விப்ட்க்கு உலக அரங்கில் பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை, இந்தியாவிலும் இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிறந்த இவர் தனது 14வது வயது முதல் பாடி வருகிறார்.
வெறும் 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள டெய்லரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் 740 மில்லியன் அமெரிக்க டாலர்கள். பல வருடங்களாக பலவிதமான கான்செர்ட்களை நடத்தி வரும் டைலர், தற்பொழுது "The Eros Tour" என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் 17ம் தேதி அமெரிக்காவில் இந்த பயணம் துவங்கியது, இது அப்படியே தொடர்ந்து மெக்சிகோ, பிரேசில், ஆஸ்திரேலியா என்று சென்று அடுத்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் சிங்கப்பூரில் சென்று முடிவடைகிறது. அங்கு 2024 மார்ச் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரையும். 7ம் தேதி துவங்கி 9ம் தேதி வரையும் நடக்க உள்ளது.
இதையும் படியுங்கள் : இதையும் படியுங்கள் : ரஜினி போட்ட டுவிட்டால் அப்செட் ஆன கீர்த்தி சுரேஷ்!
இன்று ஜூலை 5ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூர் கான்செர்ட்க்கான டிக்கெட் விற்பனையாக துவங்கியது. ஆறு நாள் நடைபெறும் அவருடைய நிகழ்ச்சிக்கு மொத்தமாக சுமார் மூன்று லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாக உள்ளது. டிக்கெட் விற்பனையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே சுமார் ஒரு மில்லியன் பேர் இணை வாயிலாக டிக்கெட் பெற குவிந்ததால் இரவு டிக்கெட் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த டிக்கெட்டுகளின் விலை சுமார் 3 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. 3 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : தொடையழகி ரம்பாவையே ஓவர்டேக் செய்யும் மிருணாள்