ஒரே ஆண்டில் 30.8 பில்லியன் இழப்பு; டாலர் மதிப்பு உயர்ந்தும் நஷ்டம் அடைந்த சிங்கப்பூர்!

By SG Balan  |  First Published Jul 5, 2023, 2:57 PM IST

சிங்கப்பூர் டாலரின் மதிப்பு உயர்வு,  அதிக வட்டி செலவு போன்ற காரணகளால் மார்ச் மாதத்துடன் முடிந்த நிதி ஆண்டில் நிகர இழப்பு 30.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.


மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் சிங்கப்பூர் நிதி ஆணையம் 30.8 பில்லியன் சிங்கப்பூர் டாலர் நிகர இழப்பை பதிவு  செய்துள்ளது. இது அந்நாட்டின் ஓர் நிதி ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிகர இழப்பு ஆகும்.

சிங்கப்பூர் டாலர் மதிப்பு உயர்வால் ஏற்பட்ட எதிர்மறையான விளைவுகள், வங்கி அமைப்பில் அதிகப்படியான பணப்புழக்கத்தை அதிகரிப்பு ஆகியவை இதற்குக் காரணம் என்று சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

பத்திரம் மற்றும் பங்குச் சந்தைகள் இரண்டும் மோசமாகச் செயல்படும் சவாலான சந்தைச் சூழலுக்கு மத்தியில் நாட்டின் அதிகாரபூர்வ அந்நியச் செலாவணி இருப்பு 0.6 பில்லியன் டாலர் லாபத்தை மட்டுமே ஈட்டியதாகவும் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் சிங்கப்பூர் டாலரின் மதிப்பு அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு பணச் சந்தை நடவடிக்கைகளில் அதிக வட்டி செலவினங்களால் நிகர இழப்பு இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது.

சீனாவுக்குப் போட்டியாக ஆப்பிரிக்க உறவுகளை வலுப்படுத்தும் இந்தியா!

அமெரிக்க டாலர் மற்றும் யூரோவுக்கு எதிராக சிங்கப்பூர் டாலரின் மதிப்பு உயர்வு கண்டது. ஆனால், நிதி ஆணையத்தின் முடிவுகளால் சிங்கப்பூர் டாலர் மதிப்பு உயர்வு குறிப்பிடத்தக்க எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மொத்தச் செலவு 2.8 பில்லியன் டாலரில் இருந்து 13.7 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. அதிகப்படியான இழப்பு காரணமாக, சிங்கப்பூர் நிதி ஆணையம் அரசின் ஒருங்கிணைந்த நிதிக்கு பங்களிக்க முடியாத நிலையில் உள்ளது. நிதியாண்டிற்கான லாபத்தையும் அரசுக்கு அளிக்க இயலாது சூழல் உள்ளது.

மார்ச் 31 நிலவரப்படி, சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் மொத்த மூலதனம் மற்றும் கையிருப்பு 34.3 பில்லியன் டாலராக இருந்தது எனவும் நிதி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

அனைத்து கிளைகளிலும் மகிளா சம்மான் கணக்கு தொடங்கலாம்! பேங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு

click me!