தொடையழகி ரம்பாவையே ஓவர்டேக் செஞ்சிடுவாங்க போல... கவர்ச்சியில் மிரள வைத்த மிருணாள் தாக்கூர்
சீதா ராமம் படத்தின் நாயகி மிருணாள் தாக்கூர் தொடையழகு தெரிய படு கவர்ச்சியாக நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Mrunal Thakur
மராத்தி நடிகையான மிருணாள் தாக்கூர், தெலுங்கில் கடந்தாண்டு வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே சீதா மகாலட்சுமி என்கிற ஹோம்லியான வேடத்தை ஏற்று நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். சீதா ராமம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகை மிருணாள் தாக்கூருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Mrunal Thakur
அடுத்ததாக நானிக்கு ஜோடியாக தெலுங்கு படமொன்றில் நடித்து வரும் மிருணாள் தாக்கூர், இந்தியிலும் பிசியாக உள்ளார். பாலிவுட்டில் அண்மையில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்கிற வெப் தொடரில் நடித்திருந்தார் மிருணாள் தாக்கூர். இந்த வெப் தொடரில் படுக்கையறை காட்சியில் இவர் நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போயினர். தற்போது ஓடிடியில், இந்த வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையும் படியுங்கள்... பார்க்க தான் சிம்பிளா இருக்கு... ஆனா ரொம்ப காஸ்ட்லி! தலைசுற்ற வைக்கும் ஷாருக்கானின் டீ-சர்ட் விலை
Mrunal Thakur
இவர் கோலிவுட்டிலும் விரைவில் எண்ட்ரி கொடுக்க உள்ளாராம். முதலில் இவர் சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா படத்தில் சூர்யாவுடன் நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் அது வதந்தி என அவரே மறுத்தார். சமீபத்திய தகவல்படி சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் மூலம் மிருணாள் தாக்கூர் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுப்பார் என கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது.
Mrunal Thakur
இப்படி செம்ம பிசியான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் மிருணாள் தாக்கூர், சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், தற்போது தொடையழகு தெரியும்படி கருப்பு நிற கவர்ச்சி உடையில் இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் படு வைரல் ஆகி வருகின்றன. இந்த போட்டோஷூட்டில் தொடையழகி ரம்பாவையே மிஞ்சும் அளவுக்கு மிருணாள் தாக்கூர் போஸ் கொடுத்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... "ஜெயம் ரவியும்.. ஆறு அறிமுக இயக்குனர்களும்" - புதியவர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கும் நல்ல மனுஷன்!