starbucks: ceo: ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் சிஇஓ-வாக இந்திய வம்சாவளி லக்ஷ்மன் நரசிம்மன் நியமனம்

By Pothy RajFirst Published Sep 2, 2022, 9:44 AM IST
Highlights

ஸ்டார்பக்ஸ் காபி செயின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட லக்ஷ்மன் நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஸ்டார்பக்ஸ் காபி செயின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட லக்ஷ்மன் நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கு முன் லக்ஷ்மன் நரசிம்மன்(வயது55) பிரிட்டனைச் சேர்ந்த ரெக்கிட் பென்கிசர் நிறுவனத்தில் சிஇஓவாக இருந்தார். இந்த நிறுவனம் நுகர்வோர் உடல்நலம், சுத்துணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கும் நிறுவனமாகும்.

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நநேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக லக்ஷ்மன் நரசிம்மனை நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

campa cola: reliance: இது 1970’- 80’ ‘கிட்ஸ்’களுக்கான செய்தி! 'கேம்ப கோலா' குளிர்பானம் மீண்டும் அறிமுகம்

2022, அக்டோபர் 1ம்தேதி ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் சிஇஓவாக லகஷ்மன் நரசிம்மன் பணியில் இணைய உள்ளார். முழுமையாக முறைப்படி 2023 ஏப்ரல் மாதம் நிர்வாகக்குழுவில் நரசிம்மன் இணைவார். அதுவரை ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் இடைக்கால சிஇஓவாக தற்போது உள்ள ஹோவர்ட் ஸ்கல்ட்ஸ் தொடர்வார். 

தற்போது நரசிம்மன் பணியாற்றிவரும் ரெக்கிட் பென்சிகர் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ செப்டம்பர் 30ம்தேதியுடந் எங்கள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து லகஷ்மன் நரசிம்மன் விலகுகிறார்” எனத் தெரிவித்துள்ளது.

ஸ்டார்பக்ஸ் நிர்வாகக் குழு இயக்குநர் மெலோடி ஹாப்ஸன் விடுத்தஅறிக்கையில் “லகஷ்மன் நரசிம்மன் உற்சாகமான தலைவர். இவரின் ஆழ்ந்த அனுபவம், சர்வதேச வாடிக்கையாளர்களை எவ்வாறு கையாள்வது என்பதற்கு உதவியாக இருக்கும். ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல சரியான வாய்ப்பாக இருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

india gdp: இந்தியாவின் பொருளாதாரம் 13.5% வளர்ச்சி: ஏப்ரல்-ஜூன் முதல் காலாண்டு முடிவு அறிவிப்பு

அமெரிக்காவில் ஏற்கெனவே பல்வேறு நிறுவனங்களில் இந்தியர்கள் முக்கியப் பதவிகளில் உள்ளனர். அவர்களோடு நரசிம்மனும் சேர்ந்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக நாதெள்ள சத்யா, அடோப் சிஇஓவாக சாந்தனு நாராயண், அல்பாபெட் சிஇஓவாக சுந்தர் பிச்சை, ட்விட்டர் தலைவர் பராக் அகர்வால் ஆகியோர் உள்ளர். இதற்கு முன் பெப்சி அன்ட் கோ நிறுவனத்தின் சிஇஓவாக ஏறக்குறைய 12 ஆண்டுகளாக இந்திரா நூயி இருந்துள்ளார்.

லக்ஷ்மன் நரசிம்மன் புனே பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்தவர். அதன்பின் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஜெர்மன் மற்றும் சர்வதேச உறவுகள் குறித்த முதுகலைப் படிப்பு முடித்துள்ளார். அதன்பின் வார்டன் ஸ்கூலில் எம்பிஏ படிப்பும் நரசிம்மன் முடித்துள்ளார்.

gold rate today: மளமளவெனச் சரியும் தங்கம் விலை!சவரன் 38,000க்கு கீழ் சரிவு: வெள்ளி 'ஷாக்':இன்றைய நிலவரம் என்ன?

இதற்கு முன் நரசிம்மன் பெப்சி அன்ட் கோ நிறுவனத்தில் சர்வதேச வர்த்தக அதிகாரியாக இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பெப்சி நிறுவனத்தின் லத்தின் அமெரிக்கா, ஐரோப்பா, சஹாரா ஆப்பிரிக்காவுக்கு தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நரசிம்மன் இருந்துள்ளார். மெக்கின்ஸி அன்ட் கம்பெனியில் மூத்த ஆலோசனை அதிகாரியாக நரசிம்மன் இருந்துள்ளார்.
 

click me!