பாகிஸ்தானை புரட்டி போட்ட வெள்ளம்.. 100 கி.மீ நீளத்திற்கு உருவான செயற்கை ஏரி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

By Thanalakshmi VFirst Published Sep 1, 2022, 6:16 PM IST
Highlights

தற்போதைய வெள்ளத்தினால், 7 ல் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கனமழையினால் ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு மற்றும் நிலசரிவிற்கு இதுவரை 3.30 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  1,136 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பாகிஸ்தான் அரசு தேசிய பேரிடராக அறிவித்து, மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சிந்த் மாகாணத்தில் இண்டஸ் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:china news: சீனா சந்திக்கும் புதிய தலைவலி! 36 ஆண்டுகளில் இல்லாத அளவு திருமணம் குறைந்துவிட்டது

இதனால் ஆற்றை சுற்றியுள்ள கரையோர பகுதிகள் நீரில் மூழ்கி போயுள்ளன. மேலும் அந்த பகுதி முழுவதும் தனி தீவாக காட்சியளிக்கிறது. இதனிடையே  அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மோடிஸ் செயற்கைக்கோள், பாகிஸ்தான் வெள்ள பாதிப்புகளை புகைப்படங்களாக எடுத்துள்ளது. அதில் தொடர் கனமழைக்கு முன்னபாக விவசாய நிலங்களாக இருந்த மிகப் பெரிய பகுதி, தற்போது வெள்ளநீரால் ஒரு பெரிய ஏரியாக உருவாகி, காட்சியளிக்கிறது. 

அந்த செயற்கை கோள் புகைப்படத்தில், சுமார் 100 கீ.மி தொலைவிற்கு அந்த ஏரி நீண்டு காணப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படம் மூலம் அந்நாட்டில் பல்வேறு பகுதிகள் வெள்ளப்பாதிப்பினால் நிலைக்குலைந்துள்ளது தெரியவந்துள்ளது. பருவமழை மாற்றத்தினால் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு அணைகள் நிரம்பி வழிந்து வருகின்றன. 

தற்போதைய வெள்ளத்தினால், 7 ல் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கனமழையினால் ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு மற்றும் நிலசரிவிற்கு இதுவரை 3.30 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  1,136 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பாகிஸ்தான் அரசு தேசிய பேரிடராக அறிவித்து, மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு பேரிடர் கால நிதியுதவியாக சுமார் 238 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தானில், கனமழையால் மொத்த உயிரிழப்பு 1,162 ஆகவும், 3,554 பேர் காயமடைந்தும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஜூனில் இருந்து தற்போது வரை 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் படிக்க:அலர்ட் !! சென்னையில் மழை தொடரும்.. இன்னும் சில மணி நேரத்தில் அடித்து ஊற்றப் போகும் மழை..

click me!