கடந்த 36 ஆண்டுகளில் இல்லாத அளவு சீனாவில் திருமணம் செய்வதும், பதிவு செய்வதும் குறைந்துவிட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
கடந்த 36 ஆண்டுகளில் இல்லாத அளவு சீனாவில் திருமணம் செய்வதும் பதிவு செய்வதும் குறைந்துவிட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
கடந்த 2021ம் ஆண்டில் 80 லட்சத்துக்கும் கீழ் திருமணம் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இது கடந்த 1986ம் ஆண்டு நிலவரத்தைவிட குறைவாகும் என்று சீனா அரசு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 24,000 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி!!
ஏற்கெனவே மக்கள் தொகை குறைந்துவரும் வரும் சிக்கலை சீனா எதிர்கொண்டுவரும் நிலையில் தற்போது திருமணம் செய்பவர்களும் குறைந்து வருவது அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள இளைய தலைமுறையினர் பெரும்பகுதியினர் "லேட் மேரேஜ்" செய்வதையே விரும்புகிறார்கள்.
இது சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சிக் குறைவு சிக்கலை உருவாக்கியுள்ளது. 2025ம் ஆண்டில் சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி நெகட்டிவ்சூழலை எட்டும், இது பொருளாதாரத்துக்கு ஆபத்தானது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது 2025ம் ஆண்டில்சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி மைனஸில் செல்லும்.
சீனா முழுவதும் 2021ம் ஆண்டில் 76.40 லட்சம் பேர் மட்டுமே கடந்த ஆண்டு திருமணத்தை பதிவு செய்துள்ளார்கள் என்று சீனாவில் சிவில் விவகார புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2020ம் ஆண்டில் இருந்ததைவிட 6.1 சதவீதம் திருமணத்தைப் பதிவுசெய்வது குறைந்துள்ளது. திருமணத்தைப் பதிவு செய்வது தொடர்ந்து 8-வது ஆண்டாகச் சரிந்துவருகிறது.
திருமணம் செய்துகொள்பவர்களின் வயது 25 முதல் 29 வயதுள்ளவர்கள் 35.3% பேர் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 0.4 சதவீதம் மட்டுமே தற்போது அதிகரித்துள்ளது.
சீனாவைப் பொறுத்தவரை வயது முதிர்ந்து திருமணம் செய்து கொள்வது தற்போது டிரண்டாகி வருகிறது. குறைந்தவயதில் திருமணம் செய்வதை பெரும்பாலும் விரும்புவதில்லை. மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து, மக்கள் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதித்தும் அதற்கு மக்கள் ஒத்துழைக்கவில்லை.
rishi sunak : ‘பிரிட்னுக்காகவும், கட்சிக்காவும் இரவுபகலாக உழைப்பேன்’: ரிஷி சுனக் உறுதி
குழந்தைப் பிறப்பு எண்ணிக்கை குறைந்துவருவது, சீனாவில் எதிர்காலத்தில் பெரும் பொருளாதாரச்சிக்கலை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் அஞ்சுகிறார்கள்.
சீனாவில் அதிகரி்த்து வந்த மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஒரு குழந்தைத் திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், மக்கள் தொகைப் பெருக்கம் குறைந்துவருவதையடுத்து, கடந்த 2016ம் ஆண்டு இரு குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதியளித்தது.
அவ்வாறு சீன அரசு குடும்பக்கட்டுப்பாடு கொள்கைகளைத் தளர்த்தியும் மக்கள் தொகை பெருக்கம் அதிகரிக்கவில்லை. இதையடுத்து, 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள மக்களுக்கு அனுமதியளித்தது. அதிலும் மக்களுக்கு ஆர்வமில்லாமல் தாமதமான திருமணத்தின்மீது நாட்டமாக உள்ளனர்.