பாகிஸ்தான் நாடு தன் மக்களை இன்று உணவுக்காகத் தெருவில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அங்கு விலைவாசி என்பது விண்ணைத் தொடும் அளவுக்கு உச்சத்தில் இருந்து வருகின்றது.
பாகிஸ்தானின் பொருளாதார சீர்குலைவுக்கு கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணமாக கூறப்படுகிறது. விளைநிலங்களில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகள் நடக்கவில்லை என்று கூறுகின்றனர். உணவுப்பொருள் உற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாத அரசு நிர்வாகம், மக்களை இன்று உணவுக்காகத் தெருவில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
undefined
கோதுமை விளைச்சலை ஊக்குவிக்க, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, வேளாண் தொழிலை மீட்டெடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக உணவுப் பொருள் இறக்குமதியில் அதிக அக்கறை காட்டுகிறது. தற்போது பாகிஸ்தானின் அந்நிய செலாவணிக் கையிருப்பு மிகவும் குறைந்துள்ளது. என்றும் கூறப்படுகிறது.
ஒரு பக்கம் நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், விலை உயர்ந்த வாகனங்கள் வரம்பு மீறி இறக்குமதி செய்யப்படுவது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நாட்டில் கோதுமை மாவு மற்றும் பருப்பு விலை உயர்வுக்கு மத்தியில், இங்குள்ள பணக்காரர்கள் நவாப்கள் ஆடம்பரத்தில் திளைப்பதையே இது காட்டுகிறது என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க..Gold Rate Today : வரலாற்றில் காணாத விலையை தொட்ட தங்கம்.. எவ்வளவு தெரியுமா?
தற்போது ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப் படுவதால் ஏழை மக்களுக்கு இலவசமாக தலா 10 கிலோ கோதுமை மாவு வழங்கப்படுகிறது. அண்மையில் பெஷாவர் நகரில் இலவச கோதுமை மாவை அதிகாரிகள் விநியோகம் செய்ய லாரியில் எடுத்துச் சென்றனர். அந்த இலவச கோதுமையைப் பெறுவதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் முண்டியடித்தனர். இதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.
இந்த நிலையில் கராச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று இலவச கோதுமை பொதுமக்களுக்கு வழங்கியது. இதனை வாங்க பொதுமக்கள் முண்டியடித்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தில் குழந்தைகள் உட்பட பலர் மூச்சு திணறி மயங்கி விழுந்தனர். இதில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் மூச்சு திணறி இறந்தனர் என்று செய்தி வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உணவு வாங்க சென்று இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ
இதையும் படிங்க..60 பவுன் கிடையாது.. மொத்தம் 200 பவுன் காணோம்..! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வழக்கில் புது ட்விஸ்ட்