இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து H-1B விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வருபவர்களை சார்ந்து வசித்து வருபவரும் அந்த நாட்டில் பணியாற்றலாம் என்று நீதிபதி அளித்து இருக்கும் தீர்ப்பு குறிப்பாக இந்தியர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் H-1B விசா பெற்று பலரும் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு சென்றவர்களில் பலரும் இந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் மூலம் சென்றவர்களாக இருக்கலாம். இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அதிகளவில் அமெரிக்காவில் இருக்கும் ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை சார்ந்து மனைவி அல்லது கணவனும் அமெரிக்கா சென்று இருப்பார்கள். இவர்கள் தகுதியானவர்களாக இருந்தபோதும், அந்த நாட்டில் பணியாற்ற முடியாத சூழல் நிலவி வந்தது.
H-1B விசா வைத்து இருப்பவர்கள் அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெறாதவர்கள். அவர்கள் அங்கு பணியில் மட்டும் இருக்கலாம். பெரும்பாலும் இந்தியா மற்றும் சீன ஐடி நிறுவனங்கள்தான் இந்தப் பணியிடங்களை நிரப்பி வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சேவ் ஜாப்ஸ் என்ற நிறுவனம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்து இருந்தது. அந்த மனுவில், ஒபாமா காலத்தில் H-1B விசா வைத்திருப்பவர்களுடன் வரும் கணவன் அல்லது மனைவியும் பணியாற்றலாம் என்ற சட்டத்தை, அதிகாரத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதி தன்யா சுட்கன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த மனுவை ரத்து செய்தார்.
Food Crisis : பாகிஸ்தானில் 10 கிலோ இலவச கோதுமை மாவிற்காக கூடிய ஆயிரக்கணக்கான மக்கள்! - 11பேர் பலி!
தன்னுடைய மனுவில், ''அமேசான், ஆப்பிள், கூகுள், கைரோசாப்ட் போன்ற ஐடி நிறுவனங்கள் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு பணிகளை வழங்கி வருகிறது. இதனால் தங்களுக்கு பணி வாய்ப்பு இழப்பு ஏற்படுவதாக தெரிவித்து இருந்தது. அமேசான், ஆப்பிள், கூகுள், கைரோசாப்ட் ஆகிய ஐடி நிறுவனங்களும் இந்த மனுவை கடுமையாக எதிர்த்து இருந்தது. இதுவரை H-1B விசா வைத்திருப்பவர்களை சார்ந்து அமெரிக்காவில் இருக்கும் ஒரு லட்சம் பேருக்கு பணி வழங்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க தகவல் ஆணையம் தெரிவிக்கிறது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தகுதியானவர்கள் அமெரிக்கா சென்று கணவருடன் அல்லது மனைவியுடன் தங்கும்போது, நிதிச் சுமை அதிகரிக்கிறது. இருவர் பணிக்குச் சென்றால் நிதிச் சுமையை சமாளிக்கலாம் என்பது அமெரிக்கா வாழ் இந்தியர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும் திறமையான இந்தியர்களுக்குத் தான் அமெரிக்காவில் வேலை கிடைக்கிறது. அமெரிக்கர்களின் பணியை எந்த வகையிலும் இந்தியர்கள் தட்டிப் பறிப்பதில்லை. மேலும், நிதிச் சுமையை மட்டும் குறைப்பதில்லை. குடும்ப ஒற்றுமையை, இணைக்கத்தை உருவாக்குகிறது என்ற கருத்தையும் அமெரிக்கா வாழ் இந்தியார்கள் தெரிவித்து வருகின்றனர்.
Pope Francis: போப் பிரான்சிஸ்க்கு சுவாசத் தொற்றுநோய் பாதிப்பு.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!
ஏற்கனவே பெரும்பாலானவர்கள் தற்போது பணியை இழந்துள்ளனர். மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான் ஆகிய நிறுவனங்கள் தங்களது பணியாட்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. அவர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். தங்களுக்கு அனுமதிக்கப்பட்டு காலம் வரை அவர்கள் அமெரிக்காவில் தங்கி வேலை செய்யலாம்.
தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டு இருக்கும் செய்தியில், கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் கிட்டத்தட்ட 200,000 ஐடி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 30 முதல் 40 சதவீதம் பேர் இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், அவர்களில் கணிசமானோர் H-1B மற்றும் L1 விசாவில் வந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.