
போப் பிரான்சிஸ்க்கு சுவாசத் தொற்றுநோய் பாதிப்பு காரணமாக ரோம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போற்றப்படுபவர் போப் பிரான்சிஸ்(86). வயது மூப்பு காரணமாக அவ்வப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போப் பிரான்சிஸ்க்கு கடந்த சில நாட்களாகவே சுவாசிப்பதில் சிரமம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து, ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதில், சுவாசத் தொற்றுநோய் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் மேலும் சில நாட்களுக்கு போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் ஓய்வில் இருப்பார் எனவும் வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே போப் பிரான்சிஸ் சமீப காலமாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்ததால் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பித்தக்கது.