அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
76 வயதான டொனால்ட் ட்ரம்ப் தன்னுடனான பாலியல் தொடர்பை மறைக்க பான் ஸ்டார் ஸ்டோமி டேனியல்ஸ்க்கு 1,30,000 டாலர் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தத் தொகையை 2016 தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து கொடுத்ததாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த குற்றசாட்டின் பேரில் டொனால்ட் ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டை மான்ஹாட்டன் கிராண்ட் ஜூரி முன்வைத்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ
நடிகைக்குப் பணம் வழங்கியதிற்கான ஆதாரத்தையும் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் கைப்பற்றியது. இதனால் ட்ரம்ப்புக்கு நெருக்கடி வலுத்தது. கிரினிமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ட்ரம்ப் ஒன்று சரணடைய வேண்டும் இல்லாவிட்டால் அவரை போலீஸார் கைது செய்வார்கள் என்று தெரிகிறது.
டொனால்ட் ட்ரம்ப் தற்போது ஃப்ளோரிடா மாகாணத்தில் இருக்கிறார். எனவே டொனால்ட் ட்ரம்ப் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும், அதற்கு முன்னதாக அவரே சரணடையலாம் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி பேசிய ட்ரம்ப்பின் வழக்கறிஞர்கள் சூசன் நெசெல்ஸ் மற்றும் ஜோசப் டகோபினா ஆகியோர் குற்றச்சாட்டுகளை தீவிரமாக போராடுவோம் என்று கூறினார்கள்.
இதையும் படிங்க..Google Pay, PhonePe or Paytm யூசருக்கு குட் நியூஸ்.. UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது