Sri Lanka Crisis: இலங்கையில் 2 நாட்களுக்கு டீசல் இல்லை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் எரிபொருள் நிலையங்களில் டீசல் இல்லாததால் இன்றும் நாளையும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
சுற்றுல்லாத்துறை முடக்கம்:
இலங்கையை பொறுத்தவரை பொருளாதாரம் என்பது சுற்றுலாத்துறையை சார்ந்தே உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாத்துறை முடங்கி, பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இலங்கையில் அந்நிய செலாவணியின் இருப்பு வெகுமாக குறைந்து, இலங்கை ரூபாயின் மதிப்பு வேகமாக சரிந்தது. நாணயத்தின் மதிப்பு சரிவு, பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வையும், பதுக்கலையும் கட்டுப்படுத்த இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி குறைவு:
அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால், வெளிநாடுகளில் உணவுப்பொருட்கள், பெட்ரோலிய எரிப்பொருள் உள்ளிடவற்றை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் நாட்டில், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இவற்றின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. மேலும் பால் பவுடர், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, மருந்து ஆகியவை வாங்குவதற்கும் கட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பெட்டோலிய நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல், டீசல் வாங்கி செல்கின்றனர். மேலும் வன்முறை ஏதும் வெடிக்காமல் இருக்க, பெட்ரோல் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி:
உணவுப் பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும் இலங்கையில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொருளாதார அவசரநிலை போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 7.5% சரிந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கோத்தபய ராஜபட்சே தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 20% க்கு அதிகமாக சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா துறை முடங்கியதன் விளைவாக, நாட்டின் பொருளாதாரம் 3.6% என்ற அளவில் சரிந்தது.
இலங்கை ரூபாய் மதிப்பு சரிவு:
அமெரிக்கடாலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் மதிப்பும் 275 ரூபாய்க்கும் மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆசியாவிலேயே மிக அதிகபட்சமாக இலங்கையில் பணவீக்கம் 15.1% இருக்கிறது. உணவுப்பணவீக்கம் 25% அதிகரித்துள்ளது என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது. நிலக்கரி பற்றாக்குறையால் தினமும் 7 மணி நேரம் மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. விலை வாசி உயர்வு, தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே, பொருளாதார நெருக்கடிக்கு தார்மீக பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபட்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டம் வெடித்தது.
டீசல் இல்லை:
இந்நிலையில் தற்போது இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள 37,500 மெட்ரிக் டன் டீசலை தரையிறக்க முடியவில்லை என பெட்ரோலிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் இலங்கையில் 2 நாட்களுக்கு டீசல் இல்லை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் எரிபொருள் நிலையங்களில் டீசல் இல்லாததால் இன்றும் நாளையும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அத்தியாவசியமான தேவைகளுக்கான டீசல் கையிருப்பில் உள்ளது. தட்டுபாடின்றி பெட்ரோல் விநியோகம் நடைபெறும் என பெட்ரோலிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: sri lanka crisis: 'நாங்க பிச்சைஎடுக்கிறோம்': இலங்கை மக்கள் கண்ணீர்: 10மணிநேரம் மின்வெட்டு, மருந்தில்லாத நிலை