முன்னணி கொரியர் நிறுவனமான FedEx-க்கு புதிய சிஇஓ நியமனம்… அதும் இந்திய அமெரிக்கர்… யார் அவர்?

By Narendran S  |  First Published Mar 29, 2022, 9:59 PM IST

அமெரிக்காவின் முன்னணி கொரியர் நிறுவனமான ஃபெடெக்ஸ் நிறுவனம் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்திய அமெரிக்கரான ராஜ் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். 


அமெரிக்காவின் முன்னணி கொரியர் நிறுவனமான ஃபெடெக்ஸ் நிறுவனம் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்திய அமெரிக்கரான ராஜ் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் மெம்பிஸ்-ஐ தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் கொரியர், ஈகாமர்ஸ், பிற சேவை துறையில் 1971 ஆம் ஆண்டு முதல் ஃபெடெக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. 6 லட்சம் ஊழியர்கள் உடன் இயங்கும் ஃபெடெக்ஸ் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செய்து வருகிறது. இந்நிலையில் ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ-வான ஃபிரடெரிக் டபிள்யூ ஸ்மித், ஜூன் 1 ஆம் தேதி முதல் இந்தப் பதவியில் இருந்து விலகும் நிலையில், அடுத்தது இப்பதவியில் யார் என்பது அனைவருடைய கேள்வியாக இருந்து வந்தது. இந்த நிலையில், ஃபிரடெரிக் டபிள்யூ ஸ்மித் இந்திய அமெரிக்கரான ராஜ் சுப்ரமணியம் பெயரை அறிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

ராஜ் சுப்ரமணியம் திறமையான தலைவர் ஃபெடெக்ஸை மிகவும் வெற்றிகரமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வார் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்றும் ஸ்மித் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ராஜ் சுப்ரமணியம் ஃபெடெக்ஸ் நிறுவனத்தில் சுமார் 30 ஆண்டுக் காலம் பல முக்கிய வர்த்தகம், சேவை பிரிவுகளில் உயர் பதவியில் பணியாற்றியுள்ளார். அனைத்திற்கும் மேலாக இவர் ஒரு இந்தியர். கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ராஜ் சுப்ரமணியம், தற்போது ஃபெடெக்ஸ் நிறுவனம் நிறுவனத்தின் குளோபல் தலைமையகம் அமைந்துள்ள டென்னசி மாநிலத்தின் உள்ள மெம்பிஸில் வசித்து வருகிறார். அமெரிக்க நிறுவனங்களின் சிஇஓவாக இருக்கும் பிற இந்தியர்களைப் போலவே ராஜ் சுப்ரமணியமும் ஐஐடி கல்லூரியில் படித்தவர் தான்.

1983-1987ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் ஐஐடி பாம்பேவில் இரசாயனப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து சைராகஸ் பல்கலைக்கழகத்தில் இரசாயனப் பொறியியலில் முதுகலைப் பட்டமும், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மார்கெட்டிங் மற்றும் பைனான்ஸ் பிரிவில் எம்.பி.ஏ முதுகலைப் பட்டமும் பெற்றார். 1991 ஆம் ஆண்டு எம்.பி.ஏ பட்டம் பெற்ற ராஜ் சுப்ரமணியம் 1996 ஆம் ஆண்டில் ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவில் தலைவராகத் சேர்ந்தார், அதன் பின்பு படிப்படியாகப் பல்வேறு உயர் பதவிகளில் இருந்தார். கடைசியாக ஃபெடெக்ஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார். தற்போது தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் இந்தியர்களை பெருமைப்பட வைத்துள்ளது. 

click me!