தடுப்பு மருந்துக்கு பதில் சலைன் சொல்யூஷன்.. வசமாக சிக்கிய மருத்துவர் - பரபரப்பு...!

By Kevin Kaarki  |  First Published Mar 29, 2022, 11:36 AM IST

மருத்து துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் சலைன் சொல்யூஷனில் சோடியம் குளோரைடு மற்றும் தண்ணீர் இடம்பெற்று இருக்கும். 


33 வயதான சிங்கப்பூர் மருத்துவர் நோயாளிகளுக்கு சலைன் சொல்யூஷனை ஊசியில் செலுத்திய குற்றத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து செலுத்துவதற்கு பதிலாக மருத்துவர் சலைன் சொல்யூஷன் அடங்கிய ஊசிகளை செலுத்தியதோடு, தேசிய நோய்த்தடுப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பதிவேட்டில் போலியான தகவல்களை பதிவு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

சலைன் சொல்யூஷன்:

Tap to resize

Latest Videos

மருத்துவராக பணியாற்றி வந்த ஜிப்சன் குவா மார்ச் 23 ஆம் தேதியில் இருந்து சரியாக 18 மாதம் அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கைகள் நிறைவுபெறும் காலக்கட்டம் வரை மருத்துவராக பணியாற்ற இடைக்கால தடை விதித்து  சிங்கப்பூர் மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டு இருக்கிறது. மருத்து துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் சலைன் சொல்யூஷனில் சோடியம் குளோரைடு மற்றும் தண்ணீர் இடம்பெற்று இருக்கும். 

கொரோனா தடுப்பு பிரிவின் கீழ் பணியாற்றி வந்த மருத்துவர் குவா பணியின் மோது சலைன் சொல்யூஷனை நோயாளுக்கு ஊசியாக செலுத்தி, சுகாதார துறை அமைச்சகத்தை ஏமாற்றி வந்தது அந்நாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவர் குவா மீது மத்திய சுகாதார துறைக்கு ஜனவரி 23 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதாக இடைக்கால உத்தரவு ஆணையம் தெரிவித்து இருக்கிறது. இந்த ஆணையம் பொது உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் நலனை காப்பாற்ற இது மிகவும் அவசியமான நடவடிக்கை என கருத்து தெரிவித்து இருக்கிறது.

இதுதவிர நோயாளி அக்கவுண்ட்களை போலியாக உருவாக்கி, கொரோனா வைரஸ் ஆண்டிஜென் ரேபிட் டெஸ்ட் எடுக்கப்பட்டதாக தவறான விவரங்களை மத்திய சுகாதார துறை தரவுகளில் பதிவேற்றம் செய்ததாகவும் மருத்துவர் குவா மீது குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது. 

சிங்கப்பூர் மருத்துவ கவுன்சில்:

இத்துடன் ரிமோட் பி.இ.டி. (பிரீ ஈவண்ட் டெஸ்டிங்) முறையாக நடத்த தவறியது, பி.இ.டி. பரிசோதனை தரவுகளை தவறாக பதிவேற்றம் செய்தது போன்ற குற்றச்சாட்டுகளிலும் மருத்துவர் குவா சிக்கி இருக்கிறார் என சிங்கப்பூர் மருத்துவ கவுன்சில் தெரிவித்து இருக்கிறது. 

மருத்துவர் குவா மீதான குற்றச்சாட்டுளை விசாரணை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுபற்றிய விசாரணையை மேற்கொள்ள சிறப்பு ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவர் குவா மட்டுமின்றி அவரின் உதவியாளர் தாமஸ் சூவா செங் சூன் மீதும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டதும், மருத்துவர் குவா, அவரின் உதவியாளர் தாமஸ் சூவா மற்றும் ஐரிஸ் கோ ஆகியோர் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். 

click me!