பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சித்தலைவர் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார். இந்நிலையில் நாடாளுமன்றம் மார்ச் 31 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சித்தலைவர் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார். இந்நிலையில் நாடாளுமன்றம் மார்ச் 31 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பி.டி.ஐ., எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பிரதமராக உள்ளார். கடந்த 2018ல் நடந்த தேர்தலில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால், அவர் பிரதமரானார்.இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால பாகிஸ்தானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தார்மீக பொறுப்பேற்று இம்ரான்கான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
மேலும் இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான நோட்டீஸை நாடாளுமன்ற செயலரிடம் கடந்த 8-ம் தேதி எதிர்க்கட்சிகள் வழங்கின. ஆனால் நாடாளுமன்ற கீழ் அவையில் ஆளும் கட்சிக்கு போதிய பலம் இருந்ததால், இந்த தீர்மானம் மூலம் இம்ரான் கான் அரசை கவிழ்க்க முடியாத நிலைமை இருந்து வந்தது. ஆனால், திடீர் பல்டியாக, எதிர்க்கட்சிகளின் கூட்டு முயற்சியால் இம்ரான் கான் அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த சில கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
undefined
கடந்த 25 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், உயிரிழந்த ஆளுங்கட்சி எம்.பி. இரங்கல் தெரிவிக்கப்பட்டு இன்று மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை பார்லிமென்டில் தாக்கல் செய்தன. அதன்படி, நாடாளுமன்றத்தில் தீர்மானத்தின் மீதான விவாதங்களும் வாக்கெடுப்பும் நடக்க உள்ளன. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் ஷப்பாஸ் ஷெ ரீப், இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கையில்லாத தீர்மானத்தை கொண்டு வந்து விவாதம் நடத்தினார்.
எதிர்க்கட்சிகளுடன், கூட்டணிக் கட்சியினர் மற்றும் சொந்தக் கட்சியினரும் போர்க் கொடி துாக்கியுள்ளதால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடித்து, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், பதவியை தக்க வைப்பாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ந்நிலையில் நாடாளுமன்றம் மார்ச் 31 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: கோதுமை, நெய் எல்லாம் உண்ட கொழுத்த பெருச்சாளி இம்ரான் கான்.. போட்டு தாக்கிய முன்னாள் பிரதமர் மனைவி..