Imran Khan: பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சி கவிழ்கிறது..! இம்ரான்கானுக்கு ஆப்பு வைத்த MQM கட்சி..!

Published : Mar 30, 2022, 08:52 AM IST
Imran Khan: பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சி கவிழ்கிறது..! இம்ரான்கானுக்கு ஆப்பு வைத்த MQM கட்சி..!

சுருக்கம்

பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கான் அரசு. இம்ரான்கான் அரசுக்கு அளித்த ஆதரவை MQM கட்சி விலக்கிக்கொண்டது. 

பாகிஸ்தான் அரசு :

பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு பணி வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த நாட்டின் தேசிய பேரவையில் இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.  முன்னதாக எதிர்க்கட்சிகளுக்கு தனது பலத்தை காட்டும் விதமாக கடந்த 27-ந்தேி தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான்கான் பிரமாண்ட பேரணியை நடத்தினார். 

பேரணியில் பேசிய இம்ரான்கான் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். எதிர்க்கட்சிகள் தங்களுக்கு இருக்கும் ஆதரவை காட்டும் விதமாக நேற்று இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பேரணியை நடத்தினர். இந்த பேரணியில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு இம்ரான்கான் மற்றும் அவரது அரசை குற்றம் சாட்டி கடுமையாக பேசினர்.

இம்ரான்கான் ஆட்சி கவிழ்ப்பு :

இந்நிலையில் இம்ரான்கான் அரசுக்கு அளித்த ஆதரவை MQM கட்சி விலக்கிக்கொண்டது. எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக MQM கட்சி அறிவித்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 172 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆளுங்கட்சியின் பலம் 164 ஆக குறைந்தது. MQM கட்சி அறிவிப்பால் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்துள்ளது.நாளை நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது விவாதம் நடைபெற உள்ளது.வரும் திங்கள் கிழமை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு