சிங்கப்பூர் நிதிநிலைமை!- நாட்டு மக்கள் அடிப்படை விசயங்களை தெந்துகொள்வது அவசியம்! பிரதமர் லீ செயன் விளக்கம்!

By Dinesh TG  |  First Published Aug 16, 2023, 6:49 PM IST

சிங்கப்பூர் நாட்டினர் பெரும்பாலானோர் நிதியிருப்பைப் பற்றிப் அடிப்படை விசயங்களைக கூட தெரிந்து வைத்திருப்பதில்லை என அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.
 


CNA ஊடகம், சிங்கப்பூர் நாட்டு நிதியிருப்பு குறித்து பிரதமர் லீயுடன் நடத்திய சிறப்பு நேர்காணலில் அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் நாட்டினர் பலரும் நிதியிருப்பு என்பது ஒரு புதையல் போல என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என பிரதமர் லீ செயன் தெரிவித்தார்.

மேலும், போதுமான அளவு நிதி இருக்கும்போது அதிலிருந்து சிறிதளவு எடுக்கலாம், ஒன்றும் ஆகிவிடாது என்று மக்கள் நினைக்கிறார்கள் என்றும், ஆனால் உண்மையில் அது புதையல் அல்ல என பிரதமர் லீ செயன் கூறினார்.

மோசமான காலக்கட்டங்களில் நிதிச்சுமையைல சமாளிக்கவே, பல தலைமுறைகளாக சேர்த்துவைக்கப்பட்ட நிதியிருப்பு பயன்படுகிறது என்றார். அடுத்தடுத்த நிலமைகளில் நிதி இருப்பு அதிகரிக்கும் என்று நாம் நம்புகிறோம். ஆனால், அதை உறுதியாக கூறமுடியாது என்றார். போர், பொருளாதார மந்த நிலை, தவறான முதலீடு, மருத்துவ தேவை, தொற்று நோய் காலம் என இப்படி எது வேண்டுமானாலும் திடீரென்று எப்போதுவேண்டுமானும் நடக்கலாம் என பிரதமர் லீ செயன் கூறினார்.

உலகில் வாழத் தகுந்த நகரங்கள் டாப் 20ல் சிங்கப்பூர்! சென்னை, பெங்களூருக்கு எந்த இடம் தெரியுமா?

நிதி இருப்பு அடுத்தடுத்த நிலைகளில் படிப்படியாகத் தொடர்ந்து அதிகரிக்கும் என்று கண்டிப்பாக சொல்ல முடியாது, அதேவேளையில், அதிலிருந்து எவ்வளவு எடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் கூறிவிடமுடியாது. எனவே நிதியிருப்பு ஓர் அவசரகால இருப்பு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

இப்போதைக்கு, அவசரச் சூழல் இல்லை. ஆனால், அது ஒரு நாள் வரக்கூடும் அதற்கு நாம் எப்போதும் தயாராக இருப்பது மிகவும் அவசியம் என பிரதமர் லி செயன் வலியுறுத்தினார். சிங்கப்பூரின் நிதியிருப்பு குறித்த "Singapore Reserves Revealed" எனும் சிறப்புத் தொடரை CNA ஊடகம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

சிங்கப்பூர் டிராவல் எக்ஸ்போ 2023!, பயணத் தேர்வில் ஐரோப்பிய நாடுகள் முதலிடம்!

click me!