Singapore Rains : சிங்கப்பூரில் எதிர் வரும் பதினைந்து நாட்களுக்கு, பூமத்திய ரேகைக்கு அருகில் பருவ மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே சிங்கப்பூரின் பல இடங்களில் அதிக இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களில், பெரும்பாலான நாட்களில் மதிய நேரத்தில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் குறுகிய கால இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. அவை சில நாட்களில் மாலை வரை நீட்டிக்கப்படலாம். சில நாட்களில் இடியுடன் கூடிய மழை பரவலாகவும், கனமாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 2023ன் இரண்டாவது பதினைந்து நாட்களில் பெறப்படும் மொத்த மழைப்பொழிவு, தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாட்களில் தினசரி வெப்பநிலை 24°C முதல் 34°C வரை இருக்கும் என்றும், வானத்தில் மேகங்கள் குறைவாக இருக்கும் சில நாட்களில் தினசரி அதிகபட்ச வெப்பநிலை சுமார் 35 டிகிரி செல்சியஸை எட்டும்.
நவம்பர் 2023ன் முதல் பாதி பொதுவாக சூடாக இருந்தது, பெரும்பாலான நாட்களில் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 33°C ஐ விட அதிகமாக இருந்தது. குறிப்பாக, நவம்பர் 3, 2023 அன்று நியூட்டனில் அதிகபட்ச தினசரி அதிகபட்ச வெப்பநிலையான 35.8 டிகிரி செல்சியஸ் பதிவானது. ஆகவே நவம்பரில் அதிக வெப்பம் நிலவிய நிலையில் இந்த இரண்டாம் பாதியில் அது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காசா துறைமுகத்தைக் கைப்பற்றிய இஸ்ரேல் ராணுவம்! ஹமாஸுடன் தீவிர துப்பாக்கிச் சண்டை!
நவம்பர் 2023 முதல் பதினைந்து நாட்களில் பெரும்பாலான நாட்களில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தாலும், தீவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த காலகட்டத்தில் சராசரிக்கும் குறைவான மழை பதிவாகியுள்ளது. உதாரணமாக குயின்ஸ்டவுனில் பதிவான மழை சராசரியை விட 84 சதவீதம் குறைவாக இருந்தது.