உலகின் மிகவும் விசுவாசமான நாயான அகிடா வகையை சேர்ந்த ஹச்சிகோ 100 வயதை எட்டியுள்ளது
ஜப்பானில் வளர்ந்த அகிடா வகையை சேர்ந்த ஹச்சிகோ நாயை பற்றி பலரும் பல புத்தகங்கள், திரைப்படங்கள் மூலம் அறிந்திருக்கலாம். டோக்கியோவில் உள்ள ஷிபுயா ரயில் நிலையத்தில் ஹச்சிகோ வெண்கல உருவச்சிலையை வைத்த அந்நாட்டு அரசாங்கம், 1931 இல் அகிடோவை தேசிய சின்னமாகவும் அறிவித்து கவுரவித்தது. இப்படி ஒரு நாயை அரசாங்கம் கவுரவப்படுத்தவும், பல படங்களில், புத்தகங்களில் அது வருவதற்கு என்ன காரணம் என்று பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்.
அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. அகிடா வகையை சேர்ந்த ஹச்சிகோ நாய், உலகின் மிகவும் விசுவாசமான நாயாக அறியப்படுகிறது. ஹச்சிகோ ஒரு கோல்டன் பிரவுன் நிற அகிடா வகை நாயாகும். 1923ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி பிறந்த அந்த நாயை, ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழத்தில் பணிபுரிந்த ஹிடெசாபுரோ யுனோ என்ற பேராசிரியர் ஒருவர் தனது செல்லப்பிராணியாக வளர்ந்து வந்தார்.
நாளை மறுநாள் தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர்!
ஹிடெசாபுரோ யுனோ ஒவ்வொரு நாளும் காலையில் ஷிபுயா ரயில் நிலையத்தில் இருந்து டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்திற்கு வேலைக்கு செல்வார். இவர் வேலைக்கு செல்லும் போதும் மீண்டும் மாலையில் வேலைவிட்டு வரும் போதும் இவரை ரயில் நிலையத்திற்கே சென்று ஹச்சிகோ வரவேற்கும்.
ஆனால், 1925ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி பல்கலைக்கழகத்துக்கு வேலைக்கு சென்ற ஹிடெசாபுரோ யுனோ மீண்டும் திரும்பவில்லை. பல்கலைக்கழகத்திலேயே, திடீரென மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்துவிட்டார். இதை அறியாத ஹச்சிகோ ஒவ்வொரு நாளும் அவரை தேடி ரயில் நிலையத்திற்கு சென்றிருக்கிறது. ஒரு நாளோ இரண்டு நாட்களோ அல்ல 1925 முதல் 1935 வரை சுமார் 10 ஆண்டுகள் தனது பாசத்துக்குரிய உரிமையாளர் ஹிடெசாபுரோ யுனோவை தினமும் தேடிச் சென்றுள்ளது ஹச்சிகோ நாய்.
ரயில் நிலைய ஊழியர்கள் அதனை விரட்ட முயற்சித்தாலும் தினமும் அங்கு செல்வதை அது நிறுத்தவில்லை. பின்னர், 1932 ஆம் ஆண்டு அக்டோபரில் ஹச்சிகோவைப் பற்றி ஜப்பானிய நாளிதழான டோக்கியோ அசாஹி ஷிம்பன் வெளியிட்ட செய்தியையடுத்தே, அதன் புகழ் ஜப்பான் மட்டுமல்ல உலகமெங்கிலும் பரவியது. இதனை கண்ட பலரும் அதனை தந்தெடுக்க முயன்றனர் ஆனால், அது அவர்களுடன் செல்லாமல் யுனோவின் முன்னாள் தோட்டக்காரருடன் சென்று விட்டது.
இதையடுத்து, 1935ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி ஹச்சிகோ தனது உயிரை விட்டது. இறந்த ஹச்சிகோவின் உடல் தகனம் செய்யப்பட்டு அதன் சாம்பல் ஹிடெசாபுரோ யுனோவின் சமாதிக்கு அருகிலேயே புதைக்கப்பட்டது. உலகின் மிகவும் விசுவாசமான நாயாக அறியப்படும் ஹச்சிகோ 100 கடந்த 10ஆம் தேதி வயதை எட்டியதை பலரும் நினைவுகூர்ந்து கொண்டாடினர்.
இந்த நாயை பெருமைப்படுத்தும் வகையில், ஷிபுயா ரயில் நிலையத்தில் ஹச்சிகோ வெண்கல உருவச்சிலையை அந்நாட்டு அரசு வைத்துள்ளது. டோக்கியோ பல்கலையின் வேளாண்மை துரையின் கட்டடத்தின் முன்னே ஹச்சிகோ மகிழ்ச்சியாக உனோவை பார்த்து பாய்வது போன்ற ஒரு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.