காசாவில் உள்ள ஹமாஸ் அரசுக் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை இலக்காகக் வைத்து இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
இஸ்ரேலிய ராணுவம் காசாவில் ஹமாஸை ஹமாஸுடன் நடத்திவரும் துப்பாக்கிச்சூடு சண்டை மூலம் வியாழக்கிழமை நகரின் முக்கிய துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
காசாவில் உள்ள ஹமாஸ் அரசுக் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை இலக்காகக் வைத்து இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதையில் ஹமாஸ் மறைந்திருப்பதாக இஸ்ரேல் கூறிவரும் நிலையில் இத்தாக்குதல் நடைபெறுகிறது.
காசாவில் இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ள பகுதிகளில் குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தம் பயங்கரமாகக் கேட்பது ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்தின் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதர், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கொண்டுவந்துள்ள போர் நிறுத்தத் தீர்மானம் அர்த்தமற்றது என்று விமர்சித்துள்ளார்.
குழந்தைகளை நான் பாத்துக்குறேன்... மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த அதிசய கணவர்!
வியாழக்கிழமை இஸ்ரேலிய ராணுவம் காசாவின் வடக்கே உள்ள துறைமுகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததிருப்பதாகக் அறிவித்துள்ளது. காசா நகருக்கு அருகே கடற்கரை பகுதியில் குறைந்தது ஒரு டஜன் டாங்கிகள் மற்றும் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளது.
இஸ்ரேல் காசா நகரில் தொடர்ந்து கடுமையான குண்டுவீச்சு மற்றும் தரைவழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் ஹமாஸ் அரசின் நாடாளுமன்றக் கட்டிடம், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் ஹமாஸ் போலீஸ் தலைமையகத்தைக் கைப்பற்றப்போவதாக அறிவித்தது.
இஸ்ரேல் மீது அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்கள் மூலம் 1,200 பேரைக் கொன்றிருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்றும் இஸ்ரேல் கூறுகிறது. சுமார் 240 பேர் ஹமாஸிடம் பணயக்கைதிகளாக உள்ளனர் என்று தெரிவிக்கிறது.
அதற்குப் பதிலடியாக ஹமாஸை ஒழித்துக் கட்டுவதாக சபதம் செய்து இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை காசா மீது நடத்தி வருகிறது. காசாவில் இந்தச் சண்டை தொடங்கியதில் இருந்து 51 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.
100 பிளாட்களில் திருட்டு விழா நடத்திய சீட்டிங் சாம்பியன்ஸ்... நகைகள், கரன்சி, வாட்ச் கொள்கை!