Singapore SCDF : சிங்கப்பூரின் தோவா பயோவில் உள்ள வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் (HDB) அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே "SCDF" என்ற எழுத்துகள் கொண்ட சட்டையை அணிந்து கொண்டு திருட்டு வேலையில் ஈடுபட்டுள்ளார் ஒரு ஆசாமி.
சிங்கப்பூரின் குடிமை பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள தகவலில், மின்சார வண்டியை திருடி சென்ற நபரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவரை தேடும் பணி துவங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் அந்த நபர் SCDF படையின் அங்கத்தினர் இல்லை என்பதையும் தெளிப்படுத்தியுள்ளது சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை.
என்ன நடந்தது?
சிங்கப்பூரின் பிரதான பகுதி ஒன்றில், SCDF படையினரின் ஆடை அணிந்து வரும் ஒரு நபர், குடியிருப்பு வளாகத்தில் நின்றுகொண்டிருந்த இ-பைக்கைத் திருடும் காட்சிகள், அங்குள்ள CCTVகளில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் TikTok தளத்தில் பகிரப்பட்டு மிகப்பெரிய அளவில் வைரலானது. கடந்த டிசம்பர் 2ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
கத்தார் சிறையில் உள்ள 8 மரண தண்டனைக் கைதிகளைச் சந்தித்த இந்தியத் தூதர்
முதலில் அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சார்ஜரை திருடிய அந்த அந்த நபர், அதன் பிறகு அந்த வாகனத்தையும் எடுத்து சென்றுள்ளார். உணவு விநியோகம் செய்பவராக அந்த வாகனத்தின் சொந்தக்காரர் CCTV காட்சிகளை பார்த்து அதிர்ந்து, போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசாரும் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்துள்ளதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போன அந்த வண்டி சிங்கப்பூரின் மண்டை (Mandai) என்ற இடம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறு சேதங்களுடன் கிடந்த அந்த வண்டியை ஓட்டி வந்த ஒருவர் அங்கு போட்டு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.