Singapore News : தன்னிடம் பணிசெய்யும் பணியாளர்களின் நலனை உறுதி செய்யாத சிங்கப்பூர் நிறுவன முதலாளியை தண்டித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.
சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம், அங்குள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் நலனில் அதிக அக்கறை கொண்ட ஒரு அமைச்சகம் என்பது பலர் அறிந்த உண்மை. அந்த வகையில் தொழிலாளர்கள் நலனில் அக்கறை காட்டாத ஒரு நிறுவனத்தின் முதலாளி மீது வழக்கு தொடுத்த நிலையில், அவருக்கு தற்போது 22 வர சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு பணியிடத்தில் ஏற்பட்ட பல பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக, அந்த நிறுவன இயக்குனருக்கு கடந்த நவம்பர் 24 அன்று 22 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பணியிடத்தில் சரியான பாதுகாப்பு நடவடிக்கை ஏற்படுத்தாததால், அங்கு பணி செய்து வந்த ஒரு கட்டுமான தொழிலாளிக்கு கடுமையான காயம் ஏற்பட்டது மட்டுமல்லாமல் அவர் படுத்தப்படுக்கையாகியுள்ளார்.
பப்புவா கினியாவில் எரிமலை வெடிப்பு.. ரூ.8 கோடி உடனடி நிவாரண உதவியை அறிவித்த இந்தியா..
கட்டிடக் கட்டுமான நிறுவனமான Ossisன் ஒரே இயக்குநராக, Denny Nasution Chng, அனைத்து பணித்தள நடவடிக்கைகளுக்கும் ஒரு சிறந்த பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்தும் பொறுப்பை வகித்தார் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று வியாழக்கிழமை டிசம்பர் 7 வெளியிட்ட செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
Fortrust Construction & Consultant உடனான நிறுவனத்தின் தொழிலாளர் வழங்கல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, Ossisன் வழிகாட்டுதலின் கீழ் ஒரு பணித்தளத்தில் சுத்திகரிப்பு பணிகளைச் செய்ய, அந்த காயமடைந்த தொழிலாளி மற்றொரு தொழிலாளியுடன் அனுப்பப்பட்டுள்ளார். குறையை ஒட்டியுள்ள சுவரில் ஏற்பட்ட விரிசல்களை பூசும் வேலைக்கு அவர் அங்கு சென்றுள்ளார்.
இந்த கூரையானது முதல் தளத்திலிருந்து சுமார் 3.5 மீ உயரத்தில் நிறுவப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 4, 2021 அன்று, இரண்டு தொழிலாளர்கள் இரண்டாவது மாடி படுக்கையறையிலிருந்து ஜன்னல் வழியாக கூரை விதானத்தை அணுகி, சுவரில் உள்ள விரிசல்களுக்கு வெள்ளை பூச்சு பூசத் தொடங்கினர். மதியம் வேலை முடிந்து, அந்த தொழிலாளர்கள் ஓய்வெடுத்த நிலையில், ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளியிடம் அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று சில பொருட்களை வாங்கி வரசொலியுள்ளார்.
அப்போது அவர் வெளியில் சென்று திரும்பியபோது, அந்த மற்றொரு தொழிலாளி முதல் தலத்தில் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவருக்கு மூளை சம்மந்தமான அடி ஏற்பட்டு இப்பொது அவர் படுத்தப்படுக்கையாகியுள்ளார். இந்நிலையில் அவருடைய இந்த விபத்திற்கு பணியிடத்தில் சரிவர செய்யப்படாத பாதுகாப்பு நடவடிக்கைகள் தான் காரணம் என்று அறியப்பட்டு, அந்த நிறுவன தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.