
இந்நிலையில் சிங்கப்பூரில் பிரபலமான நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (NTU) இளங்கலைப் பட்டதாரி ஒருவர் கடந்த அக்டோபர் 2022ல், பல்கலைக்கழக வளாகத்தில் கஞ்சா கடத்தியதாகக் கூறப்படுகிறது.
25 வயதான முஹம்மது இஸ்ஸாத் மஸ்லான் என்ற அந்த மாணவர், சுமார் 101.59 கிராமுக்குக் குறையாத அளவில் கிளாஸ் ஏ கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளைக் கொண்ட நான்கு தொகுதிகளைக் கடத்தியதாகக் கூறப்படுகிறது.
மண் மட்டும் தான் காலநிலை சூப்பர் ஸ்டார்.. COP28 துபாய் மாநாட்டில் சத்குரு பேச்சு..!
மேலும் பிடிபட்ட அந்த மாணவர், தன்வசம் போதைப்பொருளை நசுக்கும் ஒரு கிரைண்டர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவரது குற்றப்பத்திரிகையின்படி, அவர் NTUன் மெக்கானிக்கல் அண்ட் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பிரிவின் கார் பார்க்கிங்கிற்கு அருகில், கடந்த அக்டோபர் 20, 2022 அன்று மாலை 6:45 மணியளவில் போதைப்பொருளைக் கடத்தினார் என்று அந்நாட்டு ஊடங்கங்கள் தெரிவித்துள்ளது.
இஸாத் போதைப்பொருள் தொடர்பான மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார், இவை அனைத்தும் ஒரே தேதியில் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.அவர் NTU வை விட்டு வெளியேறிய பிறகு, பாசிர் ரிஸ் டிரைவ் 3 இல் உள்ள ஒரு வீட்டுத் தொகுதிக்கு இஸ்ஸாத் சென்றார், அங்கு அவர் இரவு 9:27 மணியளவில் போதைப்பொருள் குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படும் குற்றப்பத்திரிகைகள் காட்டுகின்றன.
பப்புவா கினியாவில் எரிமலை வெடிப்பு.. ரூ.8 கோடி உடனடி நிவாரண உதவியை அறிவித்த இந்தியா..
இவற்றில் 131.56 கிராம் அளவுக்குக் குறையாத கஞ்சாவைக் கொண்ட ஐந்து தொகுதிகள் கடத்தல் மற்றும் அதிக வகுப்பு A கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் வைத்திருந்தது உள்ளிட்ட பல குற்றங்கள் அடங்கும். கஞ்சா கடத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 15 பிரம்படி மற்றும் ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.