Singapore : தொழில்நுட்பத்தில் எங்கோ சென்றுகொண்டிருக்கும் சிங்கப்பூரில் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
சிங்கப்பூரில் தங்களது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட, தாயும் வேலையில் அதிகநேரம் செலவிட அவர்களின் மகனும், மகளும் தங்களது மாமா வீட்டில் வளரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த மாமாவும், அத்தையும் தான் அவர்களின் ஞானத்தாய் மற்றும் ஞானதகப்பனாக இருந்து வந்துள்ளனர்.
இந்த காலகட்டத்தில் தனது மாமா மற்றும் அவரது மனைவியுடன் நெருங்கிப் பழக துவங்கியுள்ளார் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி. இந்நிலையில் அந்த சிறுமியின் மாமாவும், அவரும் அவரது தாத்தா பாட்டி வீட்டில் ஒரு படுக்கையறையில் இருந்தபோது, ஒருமுறை அந்த சிறுமியை அந்த நபர் முத்தமிட்டதாக கூறப்படுகிறது. அவர் ஏன் அப்படி செய்தார் என்று புரியாததால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அப்போது அதை எதிர்க்கவில்லை.
உலகின் மதிப்புமிக்க நிறுவனம் மைக்ரோசாப்ட்! ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி முதலிடம்!
இந்த சூழலில் கடந்த 2017 ம் ஆண்டு முதல், பாதிக்கப்பட்ட சிறுமி தனது மாமாவின் வீட்டில் இரவு நேரத்தில் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த அத்தை தனது இரண்டு குழந்தைகளுடன் ஒரு தனி அறையில் தூங்கும்போது, அந்த சிறுமி தன் மாமாவுடன் தனி படுக்கையறையில் அந்த படுக்கையைப் பகிர்ந்து கொண்டால் என்றும் கூறப்படுகிறது.
நீதிமன்ற ஆவணங்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு, மாமா வீட்டில் அவரோடு உறங்குவது சங்கடமாக இருந்ததாகவும், ஆனால் அவளது மாமா தகாத முறையில் நடந்துகொள்ள மாட்டார் என்று நம்பியதால் அவர்கள் இரவில் சிறுமியை அங்கு தங்க அனுமதித்தனர் என்றும் கூறப்படுகிறது. ஜூன் 2017ல், ஒரு நாள் அந்த நபர் சிறுமியோடு பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளத் துவங்கியுள்ளார். மேலும் அந்தச் செயல்களை தனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், அதற்கு பதிலாக பணமும், இனிப்புகளும் வழங்குவதாகவும் கூறியுள்ளார் அந்த குற்றவாளி. இப்படி 2017 முதல் 2021ம் ஆண்டு வரை பல சந்தர்ப்பங்களில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அவர். 2021ம் ஆண்டு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 11 வயதாகி மாதவிடாய் தொடங்கும் நிலை வந்துள்ளது.
இறுதியில் அந்த சிறுமிக்கு பாலியல் தொடர்பாக நோய்கள் வரும் அளவிற்கு சென்றுள்ளது தான் கொடுமை. ஒரு கட்டத்தில் உளவியல் ரீதியாக அந்த சிறுமி பாதிக்க, அவருடைய பள்ளி தோழிகள் மூலம் இந்த தகவல் பள்ளி நிர்வாகத்திற்கு தெரிந்து, அவர்கள் அளித்த புகாரின் பெயரில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய அறையில் இருந்து அந்த சிறுமியின் 12,000க்கும் அதிகமான அந்தரங்க புகைப்படங்கள் கிடைத்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இப்பொது அந்த குற்றவாளிக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்பொது 47 வயதாகும் அந்த நபருக்கு 29 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனையும். 24 முறை பிரம்பால் அடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த சிறுமிக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.