செர்பியாவில் உள்ள பள்ளி ஒன்றில் பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செர்பியா நாட்டில் மத்திய பெல்கிரேடில் உள்ள ஒரு பள்ளியில் இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 குழந்தைகள் மற்றும் ஒரு பள்ளி காவலாளி கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் ஆறு குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கே.கே என்ற நபர் என்று அடையாளம் காணப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். அந்த மாணவர் தனது தந்தையின் துப்பாக்கியால் சுட்டதாகவும் போலீசார் கூறினர். கே.கே அதே பள்ளியில் படிக்கும் மாணவன் என்றும், அவருக்கு 14 வயது என்றும், பள்ளி வளாகத்தில் வைத்து அந்த மாணவனகைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். காலை 8:40 மணியளவில் விளாடிஸ்லாவ் ரிப்னிகர் ஆரம்பப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : ஆதார் அட்டையில் இந்த விவரங்களை சரிபார்க்கலாம்.. புதிய வசதியை அறிமுகம் செய்த UIDAI
துப்பாக்கி சூடு நடத்தியவர் முதலில் ஆசிரியர் மீதும், பின்னர் மேசைக்கு அடியில் இருந்த குழந்தைகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பள்ளியைச் சுற்றியிருந்த தடுப்புகளுக்கு போலீஸார் சீல் வைத்தனர். செர்பியாவில் உள்ள ஆரம்பப் பள்ளிகள் எட்டு தரங்களைக் கொண்டுள்ளன. எனினும் துப்பாக்கி சூடு நடத்திய மாணவன், அமைதியான மாணவர் என்று சக மாணவர்கள் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செர்பியாவில் வெகுஜன துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் என்பது மிகவும் அரிதானவை. சமீபத்திய ஆண்டுகளில் பள்ளிகளில் எந்த துப்பாக்கிச்சூடு சம்பவமும் பதிவாகவில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு பால்கன் போர் வீரர் ஒருவர் மத்திய செர்பிய கிராமத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
எவ்வாறாயினும், 1990களின் போர்களுக்குப் பிறகு செர்பியா நாட்டில் எஞ்சியிருக்கும் ஆயுதங்களின் எண்ணிக்கை குறித்து நிபுணர்கள் பலமுறை எச்சரித்துள்ளனர். பல தசாப்தங்களாக நீடித்த மோதல்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் போன்றவற்றிலிருந்து உருவாகும் இத்தகைய துப்பாக்கி சூடு சம்பவங்களை தூண்டக்கூடும் என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு.. நிதியுதவி குறித்து அமைச்சர் சொன்ன குட்நியூஸ்