காளி தேவியை அவமரியாதை செய்ததற்காக உக்ரைன் அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் காளி தேவியின் கேலிச்சித்திரத்தை 'கலை வேலை' என்ற தலைப்புடன் ஒரு வெடிப்பு புகையின் மீது மிகைப்படுத்தி ட்வீட் செய்தது. இருப்பினும், காளியை அவமரியாதை செய்யும் விதமாக சமூக ஊடக தளங்களில் இந்த புகைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து சில மணிநேரங்களில் ட்வீட் நீக்கப்பட்டது. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள உக்ரைனின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் எமின் ட்சாபரோவா தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவின் கலாச்சாரத்தை தனது நாடு மதிப்பதாகவும், இந்தியாவின் ஆதரவைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : மகாத்மா காந்தியின் பேரன் அருண்காந்தி உடல்நலக்குறைவால் காலமானார்..
"இந்து தெய்வமான காளியை அவமரியாதை செய்யும் விதத்தில் சித்தரித்ததற்கு நாங்கள் வருந்துகிறோம். உக்ரைன் மற்றும் அதன் மக்கள் தனித்துவமான இந்திய கலாச்சாரத்தை மதிக்கிறார்கள். இந்தியாவின் ஆதரவை மிகவும் மதிக்கிறார்கள். காளியின் சித்தரிப்பு ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளது. பரஸ்பர மரியாதை மற்றும் நட்பின் உணர்வில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க உக்ரைன் உறுதியாக உள்ளது..” என்று குறிப்பிட்டுள்ளார்.
We regret depicting goddess in distorted manner. &its people respect unique culture&highly appreciate🇮🇳support.The depiction has already been removed.🇺🇦is determined to further increase cooperation in spirit of mutual respect&💪friendship.
— Emine Dzheppar (@EmineDzheppar)சுமார் 20 நாட்களுக்கு முன்னர் உக்ரைன் வெளியுறவு துணை அமைச்சர் எமின் ட்ஜபரோவா இந்தியாவிற்கு வந்திருந்தார். இந்த பயணத்தின் போது, உக்ரைனின் தற்போதைய நிலைமை மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, இந்திய வெளியுறவு இணை அமைச்சர் மீனாட்சி லேகி, துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி மற்றும் உயர் தூதர்களை சந்தித்தார்.
பிப்ரவரி 2022 இல் ரஷ்யா-உக்ரைன் மோதலின் தொடக்கத்திற்குப் பிறகு, உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கான முதல் உயர்மட்ட விஜயம் இதுவாகும். தனது சந்திப்பின் போது, ரஷ்யா-உக்ரைன் மோதலில் புதுடெல்லியின் தலையிட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் ஒப்படைத்தார்..
அமெரிக்க மதிப்பீடுகளின்படி, ரஷ்யா தரப்பில் இதுவரை போரில் 100,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், டிசம்பர் முதல் இதுவரை 20000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மேற்கத்திய நட்பு நாடுகளிடமிருந்து அதிநவீன இராணுவ உபகரணங்கள் படிப்படியாக உக்ரைனுக்கு அனுப்படுகிறது. ரஷ்யர்களைத் தாக்க 12 புதிய போர்ப் படைகளை கியேவ் தயார் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சிக்காக ரூ.830 கோடி செலவு.. ஆம் ஆத்மி தலைவர் மீது வழக்குப்பதிவு