இலங்கை மட்டுமில்லை அமெரிக்காவும் அதை நோக்கித்தான் செல்கிறது! கடன் சுமையால் திண்டாட்டம்!

By SG BalanFirst Published May 2, 2023, 11:49 AM IST
Highlights

அரசின் கடன்களுக்கான தவணையைச் செலுத்துவதற்கு நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பற்றி விவாதிக்க ஜோ பைடன் முக்கிய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திங்களன்று நான்கு முக்கிய அதிகாரிகளைச் சந்திக்க சம்மன் அனுப்பியுள்ளார். அடுத்த வாரம் நான்கு அதிகாரிகளும் வெள்ளை மாளிகையில் ஆஜராக வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

வரும் ஜூன் மாதம் முதல் அரசின் கடன்களுக்கான தவணையைச் செலுத்துவதற்கு கஜானாவில் பணம் இல்லை என அந்நாட்டு நிதித்துறை அதிபர் ஜோ பைடனுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அந்நாட்டு நிதித்துறை நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கிறது.  இதுதொடர்பாக நிதித்துறை அமைச்சர் ஜேனட் யெல்லன் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜேனட்டின் கடிதத்தை அடுத்து ஜோ பைடனும் ஆடிப்போய் இருக்கிறார். அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு முடிவு காணப்படும் என்று ஜேனட் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாகவே ஆளும் ஜனநாயகக் கட்சிக்கும், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையே, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கு சென்றுள்ளது.

அமெரிக்காவின் கஜானா காலியாகிறது என்ற தகவல் வெளியானாலே உலகப் பொருளாதாரம் ஆட்டம் காண துவங்கிவிடும் என்பதுதான் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரம் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு, அபாயத்தை நோக்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளது.

கொழும்பு துறைமுகம் அருகே துப்பாக்கிச் சூடு: 8 பேர் காயம்

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் மே 9ஆம் தேதி குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பின் மெக்கார்த்தியும் பைடனும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளனர்.

ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், செனட் பெரும்பான்மையினர் தலைவர் சக் ஷுமர் மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர் மிட்ச் மெக்கனெல் ஆகியோருக்கும் அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்கக் கடன் வரம்பில் 1.5 டிரில்லியன்  டாலர் அதிகரிப்பை ஈடுகட்ட, சூரிய ஆற்றலுக்கான வரிச் சலுகைகளைக் 22 சதவீதம் குறைத்து, 4.5 டிரில்லியன் செலவினக் குறைப்புகளைச் செயல்படுத்த ஏப்ரல் 26ஆம் தேதி குடியரசுக் கட்சியின் செனட் சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஜனநாயகக் கட்சியின் செனட்டில் நிறைவேற வாய்ப்பில்லை என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

பழைய வீட்டைத் தேடி 27 நாட்கள் 64 கி.மீ. தூரம் நடந்து சென்ற கோல்டன் ரெட்ரீவர் நாய்!

click me!