அழகுக்கலை நிபுணர் ஒருவர் தற்போது சூனியக்காரியாக மாறி உள்ளார்
வேல்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு அழகுக்கலை நிபுணர் ஒருவர் தற்போது சூனியக்காரியாக மாறியுள்ளார். தனது தொழிலை மாற்றியதன் மூலம் அவர் தற்போது அதிக பணம் ஈட்டி வருகிறார். அழகுத் துறையில் பணியாற்றிய ஜெசிகா கால்டுவெல், மாந்திரீகத்தின் மீதான தனது ஆர்வத்தை தொடர தனது வேலையை விட்டுவிட்டார். தனது புதிய தொழிலின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பவுண்டுகள் சம்பாதிக்கிறார் ஜெசிகா. வேலையை விட்டுவிட்டு, தனது புதிய தொழிலைத் தொடங்க மந்திர புத்தகங்கள், டாரட் கார்டுகள் மற்றும் படிகங்களில் அவர் முதலீடு செய்துள்ளார்.
ஜெசிகாவுக்கு சுமார் 5,000 வாடிக்கையாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மாந்திரீகத்தில் தனது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி தனது மந்திர சேவைகளை ஜெசிகா வழங்குகிறார். அவர் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க : நீட் 2023 : அட்மிட் கார்டு விரைவில் வெளியீடு.. வெளியான முக்கிய தகவல்..
ஜெசிகா கால்டுவெல் ஒரு அழகுக்கலை நிபுணராக இருந்ததை விட இப்போது மூன்று மடங்கு அதிகமாக சம்பாதிப்பதாக கூறுகிறார். தான் எப்போதுமே சூனியக்காரி என்றும், உள்ளுணர்வு என்பது என் அன்றாட வாழ்க்கையில் நான் பயன்படுத்தியதை நான் உணராத ஒரு சக்திவாய்ந்த கருவி என்றும் அவர் கூறினார். தான் முழுநேர சூனியக்காரியாக வேலை செய்யத் தொடங்கியபோது, தன்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கவலைப்பட்டனர் என்றும், ஆனால் நான் நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் அவர்கள் தன்னை ஆதரித்தனர் என்றும் கூறினார்.
கடந்த 2019-ம் ஆண்டு பேஸ்புக்கில் ஒரு அமானுஷ்ய குழுவை கண்ட பிறகு தான் மாந்திரீகத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டதாக ஜெசிகா கால்டுவெல் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் தொடர்ந்து மாந்தீரிகத்தை பற்றி, மேலும் அறியத் தொடங்கியதாகவும் தெரிவித்தார். 2020 முதல், தனது சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கிய பிறகு தனது வணிகம் கணிசமாக வளர்ந்துள்ளது. அவர் தற்போது, மிகவும் பிரபலமான சூனியக்காரி ஆனார்.
29 வயதான ஜெசிகா கால்டுவெல், தனது வாடிக்கையாளர்கள் தங்களின் காதலை பற்றி அடிக்கடி விசாரிப்பதாக தெரிவித்தார். தனது வாடிக்கையாளர்களில் சிலர் தங்கள் பார்ட்னர்கள் தன்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய விரும்புகிறார்கள் என்றும், அதை பற்றி அதிகம் கேட்கின்றனர் என்றும் கூறினார். மேலும் சில சமயங்களில் அவர்களிடம் கொடூரமான உண்மையைச் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் மட்டுமே பணியாற்றும் ஜெசிகா கால்டுவெல், மந்திரங்கள் மற்றும் ஆன்மீகம் பற்றிய இலவச ஆலோசனைகளையும் வழங்குகிறார்.
இதையும் படிங்க : காற்று மாசுபாடு ஒழுங்கற்ற இதய துடிப்பு நிலையை ஏற்படுத்தலாம்.. புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்.