கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்று தனது பழைய உரிமையாளரின் வீட்டை நோக்கி சுமார் 64 கிமீ தூரம் 27 நாட்கள் நடந்தே சென்றுள்ளது.
அயர்லாந்தில் புதிய உரிமையாளருக்கு விற்பனை செய்யப்பட்ட கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்று அதன் பழைய உரிமையாளரைத் தேடி 40 மைல் பயணத்திருக்கிறது. கூப்பர் என்ற அந்த நாய் வடக்கு அயர்லாந்தின் டைரோன் கவுண்டியில் உள்ள தனது புதிய வீட்டிற்கு வந்த உடனேயே காரில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டது.
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு காணாமல் போனதாகக் கருதப்பட்ட அந்த நாய், லண்டன்டெரி கவுண்டியில் உள்ள தன் பழைய உரிமையாளரின் வீட்டை நோக்கி சுமார் 64 கிமீ நடந்தே சென்றுள்ளது. இதுகுறித்து அந்நாட்டில் காணாமல் போன செல்லப்பிராணிகளை மீட்டுக் கொடுக்கும் தொண்டு நிறுவனமான லாஸ்ட் பாவ்ஸ் சார்பில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
அதில், ஏப்ரல் 22 அன்று காணாமல்போன பற்றி தங்களுக்கு ஒரு தகவல் கிடைத்ததாகக் கூறியுள்ளனர். ஐந்து நாட்களுக்குப் பிறகு, மற்றொருவரும் அந்த நாய் தன் பழைய வீட்டை நோக்கிச் செல்வதைப் பார்த்ததாகத் தகவல் அளித்தார் எனவும் கூறி இருக்கிறது. கூப்பர் மனிதர்களின் உதவியின்றி தனியாகவே நடந்து சென்றதாகவும், பிரதான சாலைகள் வழியாக பெரும்பாலும் இரவு நேரங்களில் பயணித்துள்ளது என்றும் கூறுகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை பரப்பும் 14 செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு நடவடிக்கை
லாஸ்ட் பாவ்ஸ் தொண்டு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ''கூப்பர் புத்திசாலி. உணவு, தங்குமிடம் ஏதும் இல்லாமல், யாருடைய உதவியும் பெறாமல், தன் மோப்ப சக்தியை மட்டும் உறுதியாக நம்பி பயணித்துள்ளது" எனக் கூறுகிறார்.
மேலும், "நாங்கள் இரவு பகலாகத் தேடினோம். கூப்பர் கிட்டத்தட்ட் தன் பழைய வீட்டுக்கே திரும்பிவிட்டது. பெரிய சாலைகள், காடுகள், வயல்வெளிகள், கிராமப்புற சாலைகள் அனைத்தையும் கடந்து 27 நாட்களில் இவ்வளவு தூரம் வந்திருக்கிறது. நாங்கள் இந்த மீட்பு பணியை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்கிறார்.
பழைய உரிமையாளர்கள் தவிர்க்கமுடியாத காரணத்தால் கூப்பரை பிரியவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டதாவும் இப்போது கூப்பர் பாதுகாப்பாக இருப்பதாவும் என்றும் புதிய உரிமையாளர் நைஜெல் ஃப்ளெமிங் தெரிவிக்கிறார். புதிய வீட்டின் சூழலுடன் மெல்ல பழகிவரும் கூப்பர் கொஞ்சமாக உண்பதாவும் அவர் கூறுகிறார்.
கூப்பர் தனது புதிய வீட்டில் மோலியா என்ற மற்றொரு பெண் நாயுடன் இருப்பதாவும் புதிய இடத்தில் செட்டிலாகி வருகிறது என்றும் லாஸ்ட் பாவ்ஸ் அமைப்பினர் கூறுகின்றனர்.
கல்லூரி வேலையை உதறிவிட்டு போட்டித் தேர்வு எழுத பயிற்சி அளிக்கும் பேராசிரியர்!