கொழும்பு துறைமுகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்கள் உள்பட 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தின் கேட் 06 க்கு அருகில் பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். எட்டு பேரில் நால்வர் லேசான காயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்த எட்டு பேரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான விபரங்களை வழங்கிய பொலிஸார், எக்ஸ்பிரஸ் வே நெடுஞ்சாலைப் பணிகள் நடக்கும் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர் ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
புளூமெண்டல் வீதியில் நெடுஞ்சாலைப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பை திருட வந்த இருவரை அப்பகுதி மக்கள் தடுத்து முற்பட்டபோது, மோதல் வெடித்ததாக போலீசார் கூறுகின்றனர்.
மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த மற்றொரு பாதுகாப்புப் பணியாளரிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்க முயன்றதால், அந்தப் பாதுகாப்புப் பணியாளர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்றும் கூறியுள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.