மும்பையில் வசிக்கும் மகேந்தர் குமார் என்பவர் சஞ்சுகதா குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்காக தனது குடும்பத்துடன் பாகிஸ்தான் சென்ற சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மும்பையில் வசிக்கும் மகேந்தர் குமார் என்பவர் சஞ்சுகதா குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்காக தனது குடும்பத்துடன் பாகிஸ்தான் சென்ற சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானில் சுக்கூர் என்னும் பகுதியில் இருக்கும் சஞ்சுகதா குமாரி என்ற பெண்ணுடன் மும்பையில் வசிக்கும் மகேந்தர் குமார் என்பவருக்கு இடையே சமூக வலைதளங்களள் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்களாகினர். பின்னர் இது காலப்போக்கில் காதலாக மாறி இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதுக்குறித்து இருவரது பெற்றோர்களும் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு திருமணத்தை பேசி முடித்தனர்.
இதையும் படிங்க: காளி படத்தை அவமரியாதை செய்து பதிவிட்ட விவகாரம்.. மன்னிப்பு கேட்ட உக்ரைன் அமைச்சர்
இதை அடுத்து மும்பையில் வசிக்கும் மகேந்தர் குமார், சஞ்சுகதா குமாரியை திருமணம் செய்துகொள்வதற்காக தனது குடும்பத்துடன் பாகிஸ்தான் சென்றார். அங்கு சுக்கூரில் உள்ள உள்ளூர் மண்டபத்தில் அவர்களின் திருமணம் நடைபெற்றது. இதில் தம்பதியினரின் உறவினர்கள் மற்றும் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். திருமணமான குமாரி தனது கணவருடன் சட்டப்பூர்வ சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு இன்னும் சில நாட்களில் இந்தியா செல்வார் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உறவுகளை பேணுவதில் இந்தியா முதலிடம்.. இந்த நாடுகளில் தான் விவாகரத்து வழக்குகள் அதிகம்..
இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட சுக்கூரின் முகி இந்து பஞ்சாத்தை சேர்ந்த ஐஸ்வர் லால் மகேஜா, காதலுக்கு எல்லைகள் இல்லை என்று கூறியதோடு தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என வாழ்த்தினார். இரு நாடுகளுக்கும் இடையே பகை நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் பெண்ணை ஒரு இந்தியர் பாகிஸ்தானுக்கே சென்று திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.