சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு ஷாங்காய் நகரில் விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் நாட்டை ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெறவிருக்கும் நிலையில் பெரிய அளவில் தொற்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காய் நகரில் கடந்த புதன் கிழமை (நேற்று) புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. கடந்த ஜூலை 13ஆம் தேதிக்குப் பின்னர் ஷாங்காய் நகரில் லாக் டவுன் விலக்கிக் கொள்ளப்பட்டது. மீண்டும் தற்போது லாக் டவுன் வருமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பீஜிங் நகரில் 18 பேருக்கு நேற்று புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு நகரங்களும் சீனாவின் முக்கிய பொருளாதார நகரங்களாக பார்க்கப்படுகின்றன.
வரும் ஞாயிற்றுக் கிழமை சீனாவை ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்த மாநாடு நடைபெறும். இந்தமாநாட்டில் மூன்றாவது முறையாக மீண்டும் சீனாவின் அதிபராக நீடிப்பதற்கான அனைத்து சட்ட சலுகைகளையும் கட்சி நிர்வாகிகள் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் மீண்டும் தலைவர் தேர்வு, சட்ட விதிகள் மாற்றம் ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறும்.
un vote on russia: ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிராகத் தீர்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா
இந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் சீன அரசாங்கம் எடுத்து வருகிறது. கொரோனா பாதுகாப்பு பிரச்சாரத்தையும் சீன அரசு அதிகரித்துள்ளது. B.7 மற்றும் B.1.2.7 ஆகிய உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு மக்களை கவலை அடையச் செய்துள்ளது.
ஷாங்காய் நகரில் இருக்கும் பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், பார், ஜிம், பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவை கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மூடப்பட்டுள்ளன. ஐந்து மாவட்டங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனா கொரோனா பரவலில் ஜீரோ நிலையை அடைவதற்கு முன்பு மீண்டும், மீண்டும் லாக் டவுன் வருவதாக சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும், விரைவில் மற்றொரு லாக் டவுனை எதிர்கொள்ள காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு லாக் டவுன் இருந்தபோது அவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களும், மருந்துகளும் கிடைக்கவில்லை என்று பதிவிட்டுள்ளனர்.