இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டால் கொலை செய்யப்படலாம், அல்லது தற்கொலை செய்து கொள்வேன்.. நீரவ் மோடி கதறல்..

By Ezhilarasan Babu  |  First Published Oct 12, 2022, 6:20 PM IST

தான் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் இந்திய சிறையில் தான் கொல்லப்படலாம் என்றும் அல்லது தான் தற்கொலை செய்து கொள்ளக் கூடும் என்றும் அஞ்சுவதாக நீரவ் மோடி கூறியுள்ளார்.


தான் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் இந்திய சிறையில் தான் கொல்லப்படலாம் என்றும் அல்லது தான் தற்கொலை செய்து கொள்ளக் கூடும் என்றும் அஞ்சுவதாக நீரவ் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று பிரிட்டன் தப்பிச் சென்று அந்நாட்டு சிறையில் உள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, தொழில் முதலீட்டுக்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று விட்டு கடனைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியோடினார். இந்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தற்போது கைதாகி அந்நாட்டு சிறையில் இருந்து வருகிறார். பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வாண்ட்ஸஒர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக பட்டு வருகிறது. அதை எதிர்த்து நீரவ் மோடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை லண்டன் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Tap to resize

Latest Videos

கடந்த மாதம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என தீர்ப்பளித்தது, அந்தத் தீர்ப்புக்கு எதிராக நீரவ் மோடி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதற்கான விசாரணை கடந்த டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவரை கவனித்து வரும் சிறைத்துறை மனநல மருத்துவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதுடன் நீரவ் மோடி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவர் இந்திய சிறையில் கொல்லப் படலாம் அல்லது தன்னை தானே தற்கொலை செய்து கொள்ளலாம் என நீரவ் அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நீரவ் மோடி இந்திய சிறையில் ஒரு தனிமனிதன் தன்னைத் தானே தற்கொலை செய்து கொள்ளாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் பிரத்யேக பாதுகாப்பு முறைகள் ஏதும் இல்லை என இந்தியாவை விமர்சித்துள்ளதாக அவரின் மனநல மருத்துவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: இனி எல்லாமே எலெக்ட்ரிக் வாகனங்கள் தான்.. இந்திய ராணுவத்தின் அசத்தல் திட்டம்

அப்போது குறுக்கிட்ட இந்திய  அரசு தரப்பு வழக்கறிஞர் தேவைப்படும்போது அவர் மனநல மருத்துவரை சந்திக்கவும், மற்றொரு சிறை கைதியுடன் அவரை தங்க வைத்து அவர் கண்காணிக்கப்படுவார் என்றும், மேலும் தினமும் அவரை அவரது வழக்கறிஞர்கள் சந்திக்கவும், வாரத்தில் ஒருநாள் குடும்பத்தினர் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என கூறினார்.

மேலும் அவர் மகாராஷ்டிர மாநிலத்தின் மத்திய சிறையில் நீரவ்வை அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும் என்றும் இந்திய அரசு வழக்கறிஞர் கூறினார்.  இந்தியாவில் போதுமான அளவுக்கு மருத்துவ உதவிகள் உள்ளது, எனவே  அவரின் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு அடிக்கடி ஆலோசனை வழங்கப்படும் என்றும்  இந்திய அரசு வழக்கறிஞர் கூறினார். 

bonus railway 2022: ஜாக்பாட்! ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: மத்திய அமைச்சரவை முக்கிய முடிவு

இதற்கிடையில் குறிப்பிட்ட நீரவ் மோடியின் வழக்கறிஞர் நீரவ் மோடி மனதளவிலான பாதிப்பு மிகவும் தீவிரமானதாக உள்ளதாகவும், இரண்டு முறை மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டதாகவும், நான்குமுறை சிறையில் தற்கொலை கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டதாகவும் கூறினார். அவர் மிகவும் நம்பிக்கையற்ற உணர்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும்,  கட்டாயம் இந்தியாவுக்குச் சென்றால், அங்கு தான் கொல்லப்படலாம் என்று அவர் அஞ்சுவதாக மீண்டும் கூறினார். 

மேலும்,  அவர் தற்போது தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளார், ஒருவேளை அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால் அவருடைய மனநிலை மிகவும் தீவிரம் அடைய வாய்ப்பிருக்கிறது, மேலும் மனச்சோர்வால் நீரவ் மோடியின் தாயார் தற்கொலை செய்து கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்,

மேலும் இந்திய சிறையில் தற்கொலையை தடுப்பதற்கு என்ன மாதிரியான நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார். மீண்டும் அதற்கு பதிலளித்த இந்திய அரசின் வழக்கறிஞர் நீரவ் மோடியின் பாதுகாப்பு 100% உறுதி செய்யப்படும், அவருடைய சிறை ஜன்னல்கள்கூட திறந்தே வைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் அவரை சிறைக்காவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த வழக்கில்

விரைவில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வழக்கு விசாரணையில் நீரவ் மோடிக்கு  எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில், அதாவது அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என தீர்ப்பு வரும் பட்சத்தில், தீர்ப்பு வந்த 14 நாட்களுக்குள் பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய முடியும். அதிலும் அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்தால் மட்டுமே அவரால் மேல்முறையீடு செய்ய முடியும். ஒருவேளை உச்ச நீதிமன்றத்திலும் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வரவில்லை என்றால், அவர் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தை அணுக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.  
 

click me!