மெட்டாவை ஓர் பயங்கரவாத அமைப்பு என்று ரஷ்யா அறிவித்துள்ளதை அடுத்து சர்ச்சை கிளம்பியுள்ளது.
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, உலகின் மிகப்பெரிய பணக்காரரான மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு சொந்தமானது ஆகும். உக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக வன்முறைக்கு அழைப்பு விடுக்கும் பதிவுகளை அனுமதித்ததாக மெட்டா மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
undefined
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மாஸ்கோ நீதிமன்றத்தால் ரஷ்யாவில் தீவிரவாத நடவடிக்கையில் குற்றவாளி என கண்டறியப்பட்டது. மெட்டா அமைப்பு சார்ந்த அனைத்து நிறுவனங்களையும், பயங்கரவாத நிறுவனமாக அறிவித்து தடை செய்யப்பட்ட பட்டியலில் ரஷியாவின் நிதி கண்காணிப்பு நிறுவனம் ரோஸ்பின்மானிடரிங் இணைத்துள்ளது.
இதையும் படிங்க..வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இதன்மூலம், பிரபல சமூக வலைதளங்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டாவை தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷியா சேர்த்துள்ளது., இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற மெட்டா நிறுவனம் அளித்து வரும் சேவைகள் ரஷியாவில் துண்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் ரஷியாவில் தீவிரவாத நடவடிக்கையில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து, ரஷியாவின் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு ஆணையம், பேஸ்புக்கை தடை செய்ததுள்ளது. மெட்டா தரப்பில் தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று வாதாடியது. இந்த வழக்கை ஜூன் மாதம் விசாரித்த மாஸ்கோ நீதிமன்றம் ஒன்று, மெட்டாவின் மேல்முறையீட்டை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் திமுக எம்.பி ஆ.ராசா.. சிபிஐ எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் திமுக